தொலைக்காட்சியை சரிசெய்வதற்காக சென்றவர், வீட்டில் இருந்த இளம் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், வாழபழஞ்சி பகுதியை சேர்ந்தவர் இளம் பெண். வயது 22. கடந்த 11 ஆம் தேதி அன்று இவர் திடீரென தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

தீக்குளித்தது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதற்கான காரணம் குறித்து தெரிவித்தார். டி.வி. பழுது ஏற்பட்டதால், இளம் பெண், அருகில் இருக்கும் தனது உறவினர் ரஜேஷ் என்பவரிடம் உதவி கேட்டேன். அதற்கு ராஜேஷ், நானே டிவியை சரிபார்ப்பதாக கூறினார். வீட்டுக்கு வந்து டிவியை சரி செய்வதுபோல் பார்த்துக் கொண்டிருந்த, ராஜேஷ் திடீரென அந்த எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த நான் சத்தம்போட்ட உடனே ராஜேஷ் உடனே அங்கிருந்து வெளியே சென்று விட்டார். ராஜேஷின் இந்த நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். இந்த நிலையில் மீண்டும், ராஜேஷ் என்னிடம் வந்து, 'இது' குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினான். இதனால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதையடுத்து நான் தீக்குளித்தேன் என்று இளம் பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இந்த நிலையில், தீக்குளித்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே ராஜேஸ் தலைமறைவாகி விட்டார். ராஜேஷை கைது செய்ய வேண்டும்; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தலைமறைவான ராஜேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.