பொள்ளாச்சி விவகாரம், ரோட்டில் நிர்வாணமாக போராட்டம் பண்ண வேண்டும் பிரபல எழுத்தாளர்  நிர்மலா கொற்றவை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து  வார புலனாய்வு இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஆபாச வீடியோ பதிவு செய்து, அவர்களை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன் என்ற ரிஸ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டு, தற்போது கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டபோதும், மூன்றாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர் சிபிசிஐடி போலீசார். 

இந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சினியுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக மணிப்பூரில் நடந்தது போன்று ஏன் நாம் நிர்வாணமாக ரோட்டில் நடந்து சென்று கோட்டையை முற்றுகையிட கூடாது என எழுத்தாளர் நிர்மலா கொற்றவை அதிரடியாக பேசியுள்ளார். மேலும், இதில் பாதிக்கப்படும் பெண்கள் குறைந்தப்பட்சம் அந்த விஷயத்தை வெளியில் கூற வேண்டும் எனவும் கூறினார்.