கோவை துடியலூர் அருகே மீனாட்சி கார்டன் குடியிருப்பு இருக்கிறது. இங்கு 200 க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கிருக்கும் வீடுகளில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொடர்ச்சியாக பெண்களின் செருப்பு, உள்ளாடைகள் போன்றவை காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் ஒன்று சேர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருக்கும் ஆள் இல்லாத ஒரு வீட்டில் காலணிகள், உள்ளாடைகள் என அனைத்தும் மொத்தமாக குவிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்தநிலையில் தற்போது மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நிகழ தொடங்கியுள்ளது. இதையடுத்து குடியிருப்பு பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை மக்கள் ஆய்வு செய்தனர். அதில் ஆண் ஒருவர் பெண்களின் ஆடையான நைட்டி அணிந்து கொண்டு, காலில் கொலுசு போட்டு பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்பை திருடி இருக்கிறார். மேலும் கார்களில் இருந்தும் பொருட்களை எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்போது ஒதுக்குபுறமான இடம் ஒன்றில் திருடு போன பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

mysterious man watching bedrooms through window

சைக்கோ போல செயல்படும் மர்ம நபரால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவை பகுதியில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் வீடுகளின் படுக்கை அறையை எட்டி பார்க்கும் செய்தி வெளியாகியது. இந்தநிலையில் தற்போது பெண்களின் உள்ளாடை மற்றும் செருப்புகளை குறி வைத்து செயல்படும் சைக்கோ ஆசாமியால் கோவை வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

Also Read:  ஜோதிடர் மனைவியுடன் ஆசை தீர உல்லாசம்..! ஆத்திரத்தில் தொழிலதிபரை அறுத்துக்கொன்ற கும்பல்..!