கவுன்சிலர் பதவிக்காக அதிமுக முக்கிய பிரமுகர்களுடன் தன்னை உறவு வைத்துக் கொள்ளச் சொல்கிறார் என அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது பெண் ஒருவர்  பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.  கடலூர்  முதுநகர் சாலக்கரையை சேர்ந்தவர் அம்சவல்லி (35)  இவர் கடலூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று  புகார் ஒன்றை அளித்துள்ளார் ,  அதன் முழு விவரம் :- தனது கணவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார் ,   நான்  எனது மூன்று பிள்ளைகளுடன் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன் ,  கடந்த 2014ம் ஆண்டு கடலூர் முதுநகர் சோனங்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் தங்கராசு என்பவரின் மகன் வினோத் ராஜ் என்பவர் எனது அத்தை மகன் ஆவார். 

அவர் ஏற்கனவே கடலூர் நகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவி வகித்து வந்தார் ,  என் கணவர் வெளிநாட்டில் இருப்பதை பயன்படுத்திக்கொண்டு எனது உறவு முறையை பயன்படுத்திக் கொண்டு,  என்னை திட்டமிட்டு  என்னிடம் நல்லவர் போல் நாடகமாடி நடித்து என்னிடம் போனில் பேச தொடங்கினார்,  போனில் அடிக்கடி ஆபாசமாகவும் பேசி என் கணவர் வெளிநாட்டில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு என்னை பல நேரங்களில் பல இடங்களில் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார் .  ஒருமுறை கடலூரில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வரவழைத்து ,  அங்கு என்னுடன் தன் பாலியல் இச்சையை தீர்த்துக் கொண்டார் .  அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு என்னை தொடர்ந்து  உறவுக்கு அழைத்து மிரட்டி வருகிறார் .  இதற்கிடையில் என் கணவர் அனுப்பிய பணம் மற்றும் நான் ஊரில் இருப்பவர்களிடம் கடன் வாங்கிய  ஒரு கோடி ரூபாயை வினோத் ராஜ்ஜிடம்  கடனாக கொடுத்துள்ளேன் .  தற்போது அவருக்கு கவுன்சிலர் பதவி வேண்டும் என்பதற்காக.,

அதிமுக ,  அமமுக பிரமுகர்களுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ளுமாறு  என்னை மிரட்டி வருகிறார்.  இதுதொடர்பாக ஊர் பஞ்சாயத்தில் புகார் கொடுத்தும் பலனில்லை ,  இதற்கிடையில் என் மீது பொய்யான புகார் கொடுத்தார் என்னை விரட்டி வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.  மேலும் என்னையும் என் குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டி வருகிறார் .  அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த புகாரில் கூறியுள்ளார் இந்நிலையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வினோத்ராஜ் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் மீது ஏராளமான புகார்கள் வரத் தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.