கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் குண்டியல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி (40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 5ம் தேதி காலை வீட்டின் அருகே சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு அம்பிகா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மர்மமான முறையில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் குண்டியல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி (40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 5ம் தேதி காலை வீட்டின் அருகே சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு அம்பிகா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதையும் படிங்க;- கடைக்கு சென்ற இடத்தில் கண்டதும் காதல்! கள்ள உறவால் பிறந்த குழந்தை! கணவனுக்கு பயந்து பெண் செய்த காரியம்!

 இதுகுறித்து பர்கூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து, அம்பிகாவின் செல்போனை ஆய்வு செய்த போது திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளியைச் ஏழுமலை (24) என்பவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அம்பிகாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். 

இதனையடுத்து, 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், அம்பிகாவிற்கும், ஏழுமலைக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அம்பிகாவை கொலை செய்ய ஏழுமலை திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 4ம் தேதி இரவு அம்பிகாவை பார்க்க வந்த ஏழுமலை, அவருக்கு போன் செய்து உல்லாசமாக இருப்பதற்காக வெளியே வரும்படி அழைத்துள்ளார். 

இதையும் படிங்க;- மசாஜ் சென்டர் என்ற பெயரில் மஜாவாக நடந்த விபச்சாரம்! 14 பெண்கள்! 32 ஆண்கள்! உல்லாசம்?

அதை நம்பி வீட்டில் இருந்து வந்த அம்பிகாவை, ஏழுமலை மற்றும் அவரது நண்பர்களான நாட்றம்பள்ளியைச் சேர்ந்த கோவிந்தசாமி(23), பந்தாரப்பள்ளியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அவரது புடவையாலேயே கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.