தாபா ஃப்ரீசரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம்... உரிமையாளருடன் டேட்டிங் செய்த பெண்ணுக்கு நேர்ந்தது என்ன?
டெல்லியின் நஜப்கரில் உள்ள ஒரு தாபாவில் 25 வயதான பெண்ணின் சடலம் ஒன்று குளிர்சாதன பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் நஜப்கரில் உள்ள ஒரு தாபாவில் 25 வயதான பெண்ணின் சடலம் ஒன்று குளிர்சாதன பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தாபா நடத்தி வந்தவர் சாஹில் கஹ்லோட். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவருடன் டேட்டிங் செய்து வந்த நிலையில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுக்குறித்து அவரது காதலிக்கு தெரியவந்ததை அடுத்து கஹ்லோட்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அடபாவிங்களா.. காதலிக்க மறுத்த பள்ளி மாணவி.. ஆத்திரத்தில் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசிய இளைஞர்..!
இதனால் ஆத்திரமடைந்த கஹ்லோட் அந்த பெண்ணை கொலை செய்து தனது தாபாவின் உறைவிப்பான் பெட்டிக்குள் மறைத்து வைத்துள்ளார். இந்த நிலையில் பெண்ணின் சடலம் தாபாவின் குளிர்சாதன பெட்டியில் இருந்து போலீஸாரால் மீட்கப்பட்டதை அடுத்து சந்தேகத்தின் பேரில் தாபாவின் உரிமையாளரான கஹ்லோட்டை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நடந்த அனைத்தும் தெரியவந்தது. இதுக்குறித்து போலீஸார் கூறுகையில், கஹ்லோட்டும் அந்த பெண்ணும் உறவில் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரும் கைது; காவல் துறை அதிரடி
கஹ்லோட் வேறொரு பெண்ணை மணக்கவிருந்தது தெரிந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் வற்புறுத்தியதால் அவரை கொலை செய்து உறைவிப்பான் அறைக்குள் வைத்துள்ளார். அந்த பெண் டெல்லி உத்தம் நகரில் வசிப்பவர். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் கொல்லப்பட்டுவிட்டார். அவரது சடலம் தாபாவின் உறைவிப்பான் அறைக்குள் வைக்கப்பட்டிருந்தது. தாபா உரிமையாளர் சாஹில் கெஹ்லோட் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதை அடுத்து பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.