திருச்சி அருகே மகளின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்

திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகளின் தலையில் தாய் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

woman killed her mentally challenged own daughter in trichy district

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரியனாம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ். சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். மஞ்சுளா கடந்த ஆறு வருடங்களாக ஊர்காவல் படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மஞ்சுளாவிற்கு மனநல பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

மேலும் மஞ்சுளா தாய் அன்னக்கிளியின் பராமரிப்பில் சமயபுரம் அருகே உள்ள மாகாளிக்குடி  கிராமத்தில் இருந்த மஞ்சுளாவை தாய் அன்னக்கிளி  கலைஞரின் மகளிர் உரிமை தொகை  பெற மனு கொடுத்திட அரியனாம்பேட்டை கிராமத்திற்கு நேற்று அழைத்து வந்துளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மனு பதிவு செய்வது தொடர்பான வேலைகள் முடிந்த நிலையில், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என தாய் அன்னக்கிளி அழைத்துள்ளார். 

தடுப்பு சுவற்றை தாண்டி பறந்து சென்ற கார்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலி

ஆனால் மஞ்சுளா சிகிச்சைக்கு வர மறுத்ததுடன் வீண் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் தாய் அன்னக்கிளி ஆத்திரத்தில் மஞ்சுளாவின் தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் மஞ்சளா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மஞ்சுளாவின் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மதுரை சுங்கச்சாவடியில் தறிகெட்டு ஓடிய லாரியால் கோர விபத்து; ஒருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்

மேலும் மகளின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தாய் அன்னக்கிளியை கைது செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற வர மறுத்த மகளை தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios