செல்போனில் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்த 2வது மனைவி கத்திரியால் குத்தி கொலை
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் தொடர்ந்து செல்போனில் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்த 2வது மனைவியை குத்தி கொலை செய்த கணவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் மதுரை வீரன். இவருக்கும் வீரம்மாள் என்பவருக்கும் திருமணம் ஆன நிலையில் வீரம்மாள் வெறு ஒருவருடன் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இவர் கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்துள்ளார்.
அதேபோல் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்ரா இவர் வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சித்ரா வேலை செய்யும் உணவகத்தில் சாப்பிடச் செல்லும்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு தடாகம் பகுதியில் குடியிருந்து வந்துள்ளனர். மதுரைவீரன் மட்டும் வேலைக்கு சென்று வர சித்ரா வீட்டில் இருந்து வந்துள்ளார்.
திருமணமான ஒரே மாதத்தில் காதல் மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்; பெண் வீட்டார் கதறல்
இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கேட்டபோது உறவினருடன் பேசுவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மதுரை வீரன் சித்ராவிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார். சித்ராவும் போதையில் இருந்ததால் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.
கன்னியாகுமரியில் தவறி விழுந்த பெண் மீது ஏறி இறங்கிய பேருந்து; மகன் கண் முன்னே பலியான தாய்
இதில் மதுரைவீரன் சித்ராவை காலால் மிதித்து அருகில் கிடந்த கத்தரிக்கோலை எடுத்து சித்ராவின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் சித்ரா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பித்து நிலக்கோட்டைக்குச் சென்று அங்குள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார். அங்கு மதுரை வீரன் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து தடாகம் காவல் துறையினர் அவர்கள் இருவரும் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.