2020ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி இரவு கோட்டை பூங்காவிற்கு சென்று, அகழி கரையோரம் பேசி கொண்டிருந்தபோது 3 பேர் காதலனை சரமாரி தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அவர் கண் முன்னே இளம்பெண்ணை 3 பேரும் பலாத்காரம் செய்துள்ளனர்.

வேலூர் கோட்டையில் காதலனைத் தாக்கி இளம்பெண்ணைப் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கூட்டு பாலியல் பலாத்காரம்

வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண். வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார். இவரும் அதே கடையில் வேலை பார்க்கும் காட்பாடியை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்தனர். 2020ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி இரவு கோட்டை பூங்காவிற்கு சென்று, அகழி கரையோரம் பேசி கொண்டிருந்தபோது 3 பேர் காதலனை சரமாரி தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அவர் கண் முன்னே இளம்பெண்ணை 3 பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதையும் படிங்க;- 45 வயதில் இப்படி கூடவா ஆசைவரும்.. கருமம் கருமம்.. மாணவர்களிடம் எல்லை மீறிய ஆசிரியையின் காம லீலைகள்அம்பலம்.!

குற்றவாளிகள்

பின்னர், இளம்பெண்ணின் தங்கச் சங்கிலி, கம்மல் மற்றும் இளைஞரின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். புகாரின்படி வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து வேலூர் கஸ்பாவை சேர்ந்த மணிகண்டன்(41), வசந்தபுரம் சக்திவேல்(19), தொரப்பாடி மாரிமுத்து(31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையில் 3 பேரும் குற்றவாளிகள் என நிரூபணம் ஆனதால், அவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

தண்டனை விவரம்

வழக்கில் முதல் குற்றவாளி மணிகண்டன், 2-வது குற்றவாளி சக்திவேல் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பாலியல் குற்றவாளிகளிடமிருந்து திருட்டுப் பொருள்களை வாங்கிய குற்றத்துக்காக மூன்றாவது குற்றவாளியான மாரிமுத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க;- கஷ்டப்பட்டு கரெக்ட் செய்த கள்ளக்காதலியை கூடவே இருந்து ஆட்டையை போட்ட நண்பர்.. ஒராண்டு பிறகு வெளிவந்த உண்மை..!