நைட்டு வந்தாலே குடித்து விட்டு ஓயாமல் டார்ச்சர்.. வலி தாங்க முடியாமல் கணவனை போட்டு தள்ளிய மனைவி..!
மனைவி முத்துலட்சுமிக்கு சொந்த ஊரான தஞ்சாவூரில் உள்ள சொத்தை விற்று பணம் தரும்படி தொல்லை செய்துள்ளார். கடந்த வருடம் தகராறு ஏற்பட்டபோது, மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார்.
தினமும் குடித்து விட்டு வந்து சொத்தை விற்று பணம் தரும்படி அடித்து உதைத்து வந்த கணவரை மனைவி கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம் சோமு செட்டி தெரு 3வது சந்து பகுதியை சேர்ந்தவர் சரவணன் (40). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு திவ்யபாரதி, தனலட்சுமி மற்றும் சூர்யா ஆகிய 3 பிள்ளைகள் உள்ளன. சரவணன் ராயபுரம் பகுதியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் இவருடைய மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சரவணன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி முத்துலட்சுமியை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க;- 31 வயது ஆன்ட்டி குளிப்பதை அங்குலம் அங்குலமாக வீடியோ எடுத்த 21 வயது இளைஞர்.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
மேலும், மனைவி முத்துலட்சுமிக்கு சொந்த ஊரான தஞ்சாவூரில் உள்ள சொத்தை விற்று பணம் தரும்படி தொல்லை செய்துள்ளார். கடந்த வருடம் தகராறு ஏற்பட்டபோது, மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த சொத்தை விற்பது தொடர்பாக நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, முத்துலட்சுமியை சரவணன் தாக்கி நிர்வாணப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த முத்துலட்சுமி, கணவனை தாக்கி கீழே தள்ளி துணியால் கழுத்தை நெரித்துள்ளார். இதில், சரவணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.
இதனையடுத்து, கணவரின் தம்பிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய கணவர் சரவணன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக கதறி அழுதுள்ளார். அண்ணன் மரணத்தில் சந்தேகமடைந்த தம்பி ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முத்துலட்சுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்து வந்துள்ளார். இறுதியில் கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து முத்துலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- எனக்கும் உனக்கும் செட்டாகாது! காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி கீர்த்தனா! சரமாரியாக குத்திக்கொன்ற பிரபல ரவுடி.!