வெளிநாடு போன கணவன்.. சங்கரின் தொடர்பில் மனைவி மிருதுளா.. திரும்பி வந்த புருஷன் குக்கரால் அடித்து கொலை
காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரம் விசாகப்பட்டினம் மதுரவாடாவில் நடந்துள்ளது.முழு விவரம் பின்வருமாறு:- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் மதுரவாடா வைச் சேர்ந்தவர் புதுமுரு முரளி, இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மிருதுளா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் முரளிக்கு தென்னாப்பிரிக்காவில் பேராசிரியர் பணி கிடைத்ததால் அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கணவனைப் பிரிந்திருந்த மனைவி மிருதுளாவுக்கு ரிஷா காலனியைச் சேர்ந்த சங்கர் என்ற இளைஞனுடன் அறிமுகம் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்த நிலையில் இருவருக்கும் இடையே அது கள்ளக்காதலாக மாறியது, கடந்த ஒரு வருடமாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். கள்ளக்காதலன் ஷங்கருக்கு தற்போது 18 வயதே ஆகிறது.
கணவனைப் பிரிந்து இருந்ததால் மனைவி ஷங்கரிடம் தனது உடல்தேவையே சங்கரிடம் தீர்த்து வந்தார், இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலிருந்து முரளி வீட்டுக்கு வந்தார். ஆனால் மிருதுளா கணவனிடத்தில் நெருக்கம் காட்டவில்லை, இதனால் மனைவியின் நடத்தையில் முரளிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்: காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலி... கடுப்பான காதலன் எடுத்த விபரீத முடிவு!!
இந்நிலையில் 11ஆம் தேதி தனது தாயாரை பார்க்க திட்டமிட்டார் முரளி, இதற்கிடையில் தனது கள்ளக்காதலன் சங்கரிடம் மிருதுளா தனது கணவர் 60 நாட்கள் விசாகப்பட்டினத்தில் இருப்பார் என்றும் அதனால் நாம் சந்திக்க முடியாது என கூறியுள்ளார், அப்போது சங்கர் ஒரேயடியாக கணவன் முரளியை தீர்த்துக் காட்டி விட்டால் நாம் மகிழ்ச்சியாக வாழலாம் என கூறியதாக தெரிகிறது, அதற்கு மிருதுளாவும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் வீட்டில் தூங்கும் போது கணவன் முரளியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர். கணவர் முரளி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது மிருதுளா கணவனின் தலையில் குக்கரால் ஓங்கி அடித்தார்.
அது ரத்தவெள்ளத்தில் முரளி தூக்கத்திலேயே உயிரிழந்தார். பின்னர் காதல் துணையுடன் இருசக்கர வாகனத்தில் முரளியில் சடலத்தை தூக்கிச்சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக வீசினார், ஆனால் 2 நாட்களில் உடல் அழுகி துர்நாற்றம் வீசியதால், மீண்டும் கள்ளக் காதலனுடன் சென்று சடலத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்.
இதையும் படியுங்கள்: ஒருத்தரா ரெண்டுபேரா 15 பேர், ஒரே நேரத்துல அவளை நாசம் பண்ணிட்டாங்க... ஊருக்கு ஒதுக்குபுறத்தில் பயங்கரம்
இதற்கிடையில் மகன் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த முரளியின் தாயார் மகனை பல இடங்களில் தேடியும் விசாரித்தும் காணவில்லை இதனையடுத்து மிருதுளா கணவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கள்ளக் காதலுக்காக கணவனை அடித்துக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.