காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலி... கடுப்பான காதலன் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடகாவில் காதலித்து ஏமாற்றிய பெண்ணை காதலன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

lover killed his girlfriend and commited suicide at karnataka

கர்நாடகாவில் காதலித்து ஏமாற்றிய பெண்ணை காதலன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டம் மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரா. 26 வயதான இவர், பெலகாவியில் இருக்கும் ராணி சென்னம்மா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தர். இதேபோல் புதிகொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகா. 28 வயதான இவர், பெலகாவியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் அவர் பெலகாவி டவுனில் உள்ள பசவ நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஒருத்தரா ரெண்டுபேரா 15 பேர், ஒரே நேரத்துல அவளை நாசம் பண்ணிட்டாங்க... ஊருக்கு ஒதுக்குபுறத்தில் பயங்கரம்

lover killed his girlfriend and commited suicide at karnataka

அப்போது ரேணுகாவுக்கும் ராமச்சந்திராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ராமச்சந்திராவுடன் பேசுவதை ரேணுகா தவிர்த்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரா, ரேணுகாவிடம் பின் தொடர்ந்து  சென்றபோது நான் உன்னை காதலிக்கவில்லை  என்று சொல்லி இருக்கிறார். இதில் மேலும் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரா, தன்னை ஏமாற்றிய ரேணுகா உயிருடன் இருக்கக்கூடாது என்று  எண்ணி இரவு நேரத்தில் ரேணுகா தங்கியிருந்த வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: எங்க வீட்டுக்கு போலாமா.. பக்கா ஸ்கெட்ச் போட்டு 16 வயது சிறுமியை சீரழித்த 2 சிறுவர்கள்

lover killed his girlfriend and commited suicide at karnataka

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் கிடந்த கயிறை எடுத்து ரேணுகாவின் கழுத்தை சுற்றி  இறுக்கியதில் மூச்சு திணறி ரேணுகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரா அதே இடத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இரண்டு பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், காதலித்து ஏமாற்றியதால் ராமச்சந்திரா காதலியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios