இது நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த மணிகண்டன், மனைவி காயத்ரிதேவியை கண்டித்துள்ளார். தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை போட்டுத்தள்ள திட்டம் தீட்டினர். 

கரூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கோணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(26). இவரது மனைவி காயத்ரிதேவி (25). இவர்களுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் காயத்ரிதேவி அவ்வப்போது கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து சென்று வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான கமலக்கண்ணன்(25) என்பவருக்கும், காயத்ரிதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- ஆசையாக நெருங்கும் போதெல்லாம் ஃபுல் மப்பில் தூங்கிய கணவர்.. ஏக்கத்தில் இருந்த மனைவி செய்த பகீர் சம்பவம்..!

இது நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த மணிகண்டன், மனைவி காயத்ரிதேவியை கண்டித்துள்ளார். தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை போட்டுத்தள்ள காயத்ரி திட்டம் தீட்டினர். இதையடுத்து மணிகண்டனை மது அருந்துவதற்காக அழைத்து சென்று கமலக்கண்ணன் கொலை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிகண்டனின் மனைவி காயத்ரிதேவியின் தூண்டுதலின் பேரில் கமலக்கண்ணன், மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இந்த கொலைக்கு ரூபன் என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டு வந்தது. 

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், மணிகண்டனை கொலை செய்ய திட்டம் தீட்டிய காயத்ரிதேவி மற்றும் கொலை செய்த கமலக்கண்ணன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரூபன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க;- என்னுடைய பிள்ளையை பார்க்க விட மாட்டியா? மனைவியை சல்லி சல்லியாய் வெட்டிய கணவர்..தேனியில் பயங்கரம்.!

வழக்கினை விசாரித்த முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று தீர்ப்பு அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மணிகண்டனை கொலை செய்ய திட்டம் தீட்டிய காயத்ரிதேவி மற்றும் கொலை செய்த கமலக்கண்ணன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், மேலும் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரூபன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.