என்னுடைய பிள்ளையை பார்க்க விட மாட்டியா? மனைவியை சல்லி சல்லியாய் வெட்டிய கணவர்..தேனியில் பயங்கரம்.!

கணவன் மனைவிக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது பழனிமுருகன் அங்கிருந்த அரிவாளை எடுத்து பவித்ராவை சரமாரியாக வெட்டி விட்டு அருகில் உள்ள ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Family dispute.. Husband tried to kill his wife

கம்பம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது கணவர் காதவல் நிலையத்தில் சரணடைந்தார். 

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் பழனிமுருகன் (38) அவரது மனைவி பவித்ரா (28). இவர்களுக்கு 9 வயதில் லட்சணா என்ற பெண் குழந்தையும், கனிஷ்கர் (5) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பழனிமுருகனும், பவித்ராவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உத்தமபாளையம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இதையும் படிங்க;- மகளை கள்ளக்காதலனுக்கு இறையாக்கிய கொடூர தாய்.. ஆபாச வீடியோக்களை காண்பித்து பலமுறை பாலியல் பலாத்காரம்.!

Family dispute.. Husband tried to kill his wife

இந்நிலையில், பழனி முருகன் இன்று தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது மனைவி பவித்ரா குழந்தைகளைப் பார்க்க விடாமல் தடுத்து கணவனுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது பழனிமுருகன் அங்கிருந்த அரிவாளை எடுத்து பவித்ராவை சரமாரியாக வெட்டி விட்டு அருகில் உள்ள ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதையும் படிங்க;- சார் நான் உங்க ஸ்டுடென்ட் என்ன விட்டுடுங்க.. ஓயாமல் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் நிலைமையை பார்த்தீங்களா?

Family dispute.. Husband tried to kill his wife

இதில், ரத்த வெள்ளத்தில்  பவித்ரா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து, காவல்துறையினரின் உதவியுடன் அருகில் இருந்தவர்கள் பவித்ராவை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ராயப்பன்பட்டி காவல்துறையினர் பழனிமுருகனின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios