கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், தானூரைச் சேர்ந்தவர் சாஹத். மீன் வியாபாரியான இவருக்கு சவுஜத் (30) என்ற மனைவியும் 4 வயதில் குழந்தையும் உள்ளார்கள். சவுஜத்துக்கு, அப்பகுதியைச் சேர்ந்த பஷீர்  என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. சாஹத், வியாபாரத்துக்காக வெளியே சென்றவுடன், இவர்கள் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

பல்வேறு இடங்களுக்கும் இவர்கள் சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் கள்ளக்காதலன் பஷீர், வேலை விஷயமாக வெளிநாடு சென்றுள்ளார். ஆனாலும், அவர்கள் இருவருக்கும் இடையேயான கள்ளக்காதல் செல்போன் மூலம் தொடர்ந்து வந்துள்ளது. 

தங்கள் காதலுக்கு சாஹத் தடையாக இருப்பதாலும், அவரைக் கொலை செய்தால்தான் நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியும். எனவே  சாஹத்தை கொலை செய்ய அவர்கள் முடிவு செய்தனர். மேலும், இதற்கு துணையாக பஷீரின் நண்பருடம் இருந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பஷீர் தனது நண்பருடன், கள்ளக்காதலி சவுஜத்தின் வீட்டுக்கு சென்றார்.

கள்ளக்காதலன் வருகைக்காக காத்திருந்த சவுஜத், பஷீர் வந்தவுடன் கதவை திறந்துள்ளார். உள்ளே புகுந்த பஷீர் மற்றும் அவரது 
நண்பரும், தூங்கிக் கொண்டிருந்த சாஹத்தை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சாஹத் ரத்த வெள்ளத்தில் மயங்கியுள்ளார்.

 சாஹத் இறந்து விட்டதாக கருதி பஷீரும், அவரது நண்பரும் புறப்பட்டு சென்று விட்டனர். சாஹத் உயிரோடு இருப்பதை அறிந்த 
சவுஜத், வீட்டில் இருந்த அரிவாளைக் கொண்டு சாஹத்தின் கழுத்தை வெட்டியுள்ளார். இதன் பின்னர், வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சாஹத்தை கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டதாக கூறி நாடகமாடியுள்ளார்.

சாஹத் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறத்து சம்பவ இடத்துக்கு வந்தபோலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாஹத் கொலை செய்யப்பட்டது குறித்து சவுஜத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சவுஜத், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். 

இதனால் சந்தேகமடைந்த போலீசார் சவுஜத்திடம் கிடுக்குப்பிடி கேள்வி எழுப்பினார். போலீசாரின் கேள்விகளுக்கு திணறிய சவுஜத்,  கள்ளக்காதலுக்கு கணவன் இடையூறாக இருப்பதாக கூறி அவரை கள்ளக்காதலன் பஷீர் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, சவுஜத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் பஷீரின் நண்பரும் கைது  செய்யப்பட்டுள்ளார். சவுஜத்தின் கள்ளக்காதலன் தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, கணவனை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தி உள்ளது.