புதுக்கோட்டை மாவட்டம். கந்தர்வகோட்டை அருகே விவசாய நிலத்தில் கொட்டகை போட்டு கொடியை நட்டு இனி இந்த இடம் எங்களுக்குத்தான் என விசிக கட்சியினர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம். கந்தர்வகோட்டை அருகே விவசாய நிலத்தில் கொட்டகை போட்டு கொடியை நட்டு இனி இந்த இடம் எங்களுக்குத்தான் என விசிக கட்சியினர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த கேசவன் கூறுகையில், ‘‘ எங்க சித்தப்பா சின்னதுரை பேரில் 1988 சுப்பையா செட்டியாரிடம் இருந்து ரெஜிஸ்டர் செய்து வாங்கிய சொத்து இது. நாங்கள்தான் விவசாயம் பண்ணிட்டு வரோம். இப்போ சமீபத்துல ரெண்டு மூணு வருஷமா நமச்சிவாயம் என்பவர் ‘இது எங்க இடம்னு சொல்லி பிரச்சனை பண்ணிட்டு இருக்காரு. கடந்த ரெண்டு வாரத்துக்கு முன்னால விசிக கட்சியில் இருந்து வடுகப்பட்டி பாஸ்கர், கோமாபுரத்தில் இருந்து ஒரு நாலஞ்சு பேரை கூட்டிட்டு வந் ‘இது எங்க இடம். நான் வாங்கிட்டேன்’’எனச் சொல்லி கொட்டகை போட்டிருந்தாங்க.

எங்களுக்கு அந்த விஷயம் தெரியல. நாங்க அடுத்த நாள் வந்து பாக்குறோம். விவசாயம் பண்ணிருக்க வயல்ல வந்து கொட்டகை போட்டு இருந்தாங்க. நாங்க பிரிச்சு போட்டுட்டோம். அந்த பிரிச்சுப் போட்டதுக்கு அப்புறம் எங்ககிட்ட வந்து பிரச்சினை செய்தாங்க. எங்க மேல பிசிஆர் கேஸ் கொடுத்தாங்க. எங்கள கூப்பிட்டு விசாரிச்சு இருந்தாங்க. நாங்க எங்கிட்ட இருந்த டாக்குமெண்டையும் கொடுத்தோம். அடங்கல் வாங்கி வரச்சொன்னாங்க. அதையும் கொண்டு போய் கொடுத்தோம்து. இது எங்க இடம்தான்னு சொன்னோம். நாங்க விசாரிக்கிறோம்னு போலீஸ் தரப்பில் சொன்னாங்க. அதுக்குப் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கல.
மறுபடியும் அடுத்த ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் இது எங்களோட இடம்னு வந்து கொட்டகையையும், கொடியும் ஏத்திட்டு இருந்தாங்க. அந்த விஷயங்கள் தெரிய வந்து, நாங்க இடத்துக்கு போனோம். அப்போ, ‘‘இங்க விடுதலை சிறுத்தை கட்சி கொடி இருக்கும். இதை தாண்டி நீங்க தடுக்க வந்தீங்கன்னா உங்களை வெட்டுவோம், குத்துவோம், கொலை பண்ணுவோம்னு சொல்லி மிரட்டுனாங்க. அதையும் தாண்டி வந்து நான் இல்லாத நேரத்தில் பிரிச்சு போட்டா நான் பிற்படுத்தப்பட்ட சமூகம். என்னை அவதூரா பேசினாங்கனு சொல்லி உங்க மேல பிசிஆர் கேஸ் கொடுப்பேன்னு சொல்லி மிரட்டுனாங்க. நாங்க உயிருக்கு பயந்துட்டு போயிட்டோம். எங்களுக்கு தனிப்பட்ட முறையில் விசிக மீது நல்ல அபிப்ராயம் இருக்கு. ஆனா இவங்க சாதியை சொல்லி தப்பா பயன்படுத்த அபகரிக்க பார்க்கிறார்கள்.
பாஸ்கரன் ஆட்கள் சேர்ந்துக்கிட்டு இந்த இடத்த எடுக்கணும்னு திட்டம்போட்டு தப்பான வேலைகளை பார்த்துட்டு இருக்காங்க. இது தொடர்பா புதுக்கோட்டையிலும், கந்தர்வக்கோட்டையிலும் புகார் கொடுத்தோம். அவங்க நடவடிக்கை எடுக்கிறோம்ன்னு சொல்றாங்க. அதுக்கப்புறம் எந்த பதிலும் இருக்க மாட்டேங்குது. நாங்க போய் கேட்டா பொறுமையா இருங்க. நடவடிக்கை எடுக்கிறோம்னு சொல்றாங்க. அதுக்கப்புறம் எதுமே செய்ய மாட்டேங்கிறாங்க. இப்போ ஒரு வாரமா இந்த கொட்டா இருக்கு. விவசாயம் பண்ண முடியல. அப்புறம் என்ன ஆகும்னு எங்களுக்கே தெரியல. அதான இடத்தை மீட்டு கொடுக்கணும். எங்க உயிருக்கு பாதுகாப்பு தரணும்.
சித்தப்பா சின்னத்துரை பேரில் தான் இடம் இருக்கு. நமச்சிவாயம் என்பவர் ஒவ்வொரு வருஷமும் பிரச்சனை பண்ணிட்டே இருந்தார். அவரிடம் எங்க எங்க அப்பா முத்துசாமியிடம் வட்டிக்கு பணம் வாங்கிருக்காரு. அதுக்கு ஒரு ஆதாரமா எங்க சித்தப்பா பேரில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட ஒரு பத்திரத்தை கொடுத்திருந்தார். அதை மூணு வருஷம் கழிச்சு எங்க அப்பா வட்டியோட சேர்த்து 88,000 கொடுத்துட்டு அந்த பத்திரத்தை கேட்டிருக்கார். கொஞ்ச நாள் கழிச்சு நமச்சிவாயம் இறந்துவிட்டார். அவர் இறந்ததுக்கு அப்புறம் அந்த பத்திரத்தை சின்னதுரை எடுத்து வைத்து இருக்கிறார். அதை வைத்து இப்போ பிரச்சினை செய்து வருகிறார்’’ என்கிறார்.

