திண்டிவனம் அருகே பெற்றோர்களைப் பழிவாங்குவதற்காக  அவர்களின் 10 வயது  சிறுமியை காமுகன் ஒருவன் பாலியல்  வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே   நல்லாலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி துர்காதேவி தம்பதியர், இவர்களின் 10 வயது மகள் கவிதாஸ்ரீ அதே பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார், கடந்த மூன்றாம் தேதி கடைக்கு சாக்லேட் வாங்க சென்றார் கவிதாஸ்ரீ, கடைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை, இவ்வளவு நேரமாகியும் கடைக்குச் சென்ற மகளை காணவில்லையே என்ற பதற்றத்தில்,  மகளைத் தேடி அவளது பெற்றோர்கள் கடைக்கு சென்றனர், சாக்லேட் வாங்கிக்கொண்டு சென்று விட்டாளே என தெரிவித்தனர். இதனால் மற்ற இடங்களில் கவிதாஸ்ரீயை பெற்றோர்கள் தேடினார், பல மணி நேரம் தேடியும் கவிதாஸ்ரீயை காணவில்லை. இரவு நேரம் ஆக ஆக பதற்றமடைந்த பெற்றோர்கள் பிரம்மதேசம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை கொண்டு விசாரணை தொடங்கினார். சிறுமி கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தியதில், அவர்களது வீட்டிற்கு பின்புறம் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் சிறுமி கவிதாஸ்ரீ சடலம் மிதந்தது. கவிதா பிணமாக கிடப்பதை கண்டி கிருஷ்ண மூர்த்தி துர்கா தம்பதியினர் கதறி அழுதனர். அவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

 

சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கவிதாஸ்ரீ பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கவிதாஸ்ரீ உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கிடைத்த சில தடயங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில்,  அதே ஊரைச் சேர்ந்த ராசையா என்பவரது மகன் மகேந்திரன்,  கிருஷ்ணமூர்த்தி குடும்பத்துடன் இருந்த முன்விரோதத்திற்கு பழிதீர்க்கும் நோக்கில் சிறுமி கவிதாஸ்ரீயை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது, போலீஸ் விசாரணையல் மகேந்திரன் அதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து  அவரைக் கைது செய்த போலீசார் கொடூரன் மகேந்திரனை கடலூர் சிறையில் அடைத்தனர்