பொய் வழக்கில் தூக்கிச் சென்று டார்ச்சர் செய்த போலிஸ்! விரக்தி அடைந்த மாணவரின் விபரீதச் செயல்!
உ.பி. காவல்துறையினர் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த இளைஞர் மீது பொய் வழக்கு பதிவு செய்து துன்புறுத்தி வந்ததால் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் மூன்று காவலர்களால் துன்புறுத்தப்பட்டதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக ஞாயிற்றுக்கிழமை காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் ஆஷிஷ் குமார் லக்னோவில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் காவல்துறையினர் தற்கொலைக்கு முன் எழுப்பட்ட கடிதம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். அதில், மூன்று காவல்துறை அதிகாரிகள் தன்னை துன்புறுத்துவதாக ஆஷிஷ் குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் தன்னை ஒரு குற்ற வழக்கில் தவறாகச் சிக்க வைத்தனர் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்கள் ராமாயணம் படியுங்கள்! தெலுங்கானா ஆளுநர் தமிழசை அறிவுரை
"அவர் ஒரு தற்கொலைக் குறிப்பை விட்டுச் சென்றிருக்கிறார். அதில் அவர் மூன்று காவல்துறையினரால் துன்புறுத்தப்படுவதாகவும், ஒரு வழக்கில் தன்னை பொய்யாகச் சிக்கியதாகவும் குற்றம் சாட்டுகிறார். இதனால் தன் வாழ்க்கை முடித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்" என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக மாணவரின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று போலீஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக லக்னோ மேற்கு டிசிபி ராகுல் ராஜ் கூறுகிறார்.
போராடி கணவரை ஜாமீனில் மீட்ட மனைவி! வெளியே வந்த 15 நாளில் சந்தேகப்பட்டு சுட்டுக்கொன்ற கணவர்!
"ரஹிமாபாத் காவல் நிலையத்தில் ஆஷிஷ் குமார் என்ற நபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தற்கொலைக் கடிதத்தை அளித்துள்ளனர். அதில் ரஹிமாபாத் காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மலிஹாபாத் ஏசிபி இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என டிசிபி சொல்கிறார்.
மேலும், இந்த வழக்கில் "விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதற்காக, மூன்று போலீசாரும், போலீஸ் லைனுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கை நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்றும் ராகுல் ராஜ் தெரிவிக்கிறார்.
சிறுவனை கடித்துக் குதறிய தெரு நாய்கள்! பேச்சுத்திறன் குறைபாடு கொண்ட சிறுவன் பரிதாப பலி!