போராடி கணவரை ஜாமீனில் மீட்ட மனைவி! வெளியே வந்த 15 நாளில் சந்தேகப்பட்டு சுட்டுக்கொன்ற கணவர்!
உத்தரப் பிரதேசத்தில் தன்னை சிறையில் இருந்து ஜாமீனில் அழைத்துவந்த மனைவியை பரபரப்பான சந்தையில் வைத்துத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
உத்தரப் பிரதேசத்தில் தனது மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாக சந்தேகப்பட்ட 40 வயது நபர், 15 நாட்களுக்கு முன் தன்னை சிறையில் இருந்து ஜாமீனில் அழைத்துவந்த தன் 32 வயது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார். சனிக்கிழமை மாலை பரேலியின் மேற்குப் பகுதியில் உள்ள ஃபதேகஞ்சில் பரபரப்பான சந்தையில் இந்தக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கணவர் கிருஷ்ணபால் லோதி பல முறை துப்பாக்கியால் சுட்டதில் அவரது மனைவி பூஜா படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளார். உடன் இருந்த பூஜாவின் தோழி முன்னாவும் துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றிருக்கிறார். பூஜாவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுவனை கடித்துக் குதறிய தெரு நாய்கள்! பேச்சுத்திறன் குறைபாடு கொண்ட சிறுவன் பரிதாப பலி!
ஒரு போலீஸ் அதிகாரியின் கூற்றுப்படி, விசாரணையின்போது, கிருஷ்ணபால் தனது மனைவி தன்னை ஏமாற்றியதாக சந்தேகப்பட்டதாகவும், அதனால்தான் மனைவி பூஜாவை சுட்டுக் கொன்றதாகவும் தெரியவந்துள்ளது. "அவள் சாகவேண்டியவள் தான். அதனால்தான் நான் அவளைக் கொன்றேன், எனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை" என கிருஷ்ணபால் லோதி போலீசாரிடம் கூறியிருக்கிறார்.
2012ஆம் ஆண்டு பூஜாவும் கிருஷ்ணபாலும் தங்கள் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். பூஜா குடும்பத்தை நடத்துவதற்காக பியூட்டி பார்லர் நடத்தி வந்தாகவும் சொல்கின்றனர்.
நீ சின்ன பையன், என்னை மறந்துரு... கழற்றிவிட்ட காதலியை கழுத்தை நெறித்துக் கொன்ற சிறுவன்
கிருஷ்ணபால் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். "குற்றம் சாட்டப்பட்டவர் கொலை நடந்த இடத்தில் அவர் பயன்படுத்திய ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார்" என பரேலி நகர எஸ்பி ராகுல் பாடி கூறுகிறார். கிருஷ்ணபால் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 302 (கொலை) மற்றும் 307 (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இதுகுறித்து பூஜாவின் தாய் ஷீலா தேவி கூறுகையில், "கிருஷ்ணபால் குடிகாரனாக இருந்தார். தினமும் இரவு குடித்துவிட்டு வந்து என் மகளை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார். சனிக்கிழமை குடிபோதையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணபால், சிறுவயது மகன்கள் முன்னிலையில் பூஜாவை சரமாரியாக தாக்கினார். கோபத்தில் ஒரு நாட்டுத் துப்பாக்கியை எடுத்து சுட வந்தபோது, பூஜா பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டாள். அவர் அவளைத் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றார்." என்கிறார்.
அமெரிக்கா செல்லும் பிரதமர்! நியூ ஜெர்சி உணவகத்தில் 'மோடி ஜி' பெயரில் இந்திய உணவு ரெடி!