உயிர் நண்பனின் மரணத்தைத் தாங்க முடியாமல் சிதையில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நபர்!

அசோக்கின் உடலை தகனம் செய்ய தீயிட்டதும் பலரும் வெளியேறத் தொடங்கினர். அப்போது அசோக்கின் நண்பர் ஆனந்த் திடீரென எரியும் தீயில் விழுந்து உயிரிழந்தார்.

UP Man Jumps Into Friend's Funeral Pyre, Dies: Cops

உத்தரப் பிரதேச மாநிலத்தில் யமுனை ஆற்றின் கரையில் தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நபர் நண்பரின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் திடீரென சிதையில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் என உ.பி. காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நாக்லா கங்கர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் அசோக். 42 வயதான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை காலை உயிரிழந்ததார். அவரது இறுதிச் சடங்குகள் காலை 11 மணியளவில் யமுனை ஆற்றங்கரையில் நடைபெற்றன.

பெண்ணுடன் குடும்பம் நடத்திவிட்டு திருமணத்துக்கு 'நோ' சொன்ன சிறப்பு எஸ்.ஐ. டிஸ்மிஸ்

UP Man Jumps Into Friend's Funeral Pyre, Dies: Cops

இறுதிச் சடங்குகளின்போது அவரது நண்பர் ஆனந்த் (40) உள்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். அசோக்கின் உடலை தகனம் செய்ய தீயிட்டு பிறகு அங்கிருந்த பலரும் வெளியேறத் தொடங்கினர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஆனந்த் சட்டென்று சிதையில் குதித்தார்.

கொழுந்து விட்டு எரியத் தொடங்கிய சிதையில் விழுந்த ஆனந்த்தை அங்கு இருந்தவர்கள் வெளியே இழுத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் ஆக்ரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். 

இருப்பினும், ஆக்ரா செல்லும் வழியிலேயே ஆனந்த் உயிரிழந்துவிட்டார் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். நண்பரின் பிரிவைத் தாங்கமுடியாமல் தானும் எரியும் நெருப்பில் விழுந்து உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வுகளில் ChatGPT பயன்படுத்தியதால் ஒரே விடையை எழுதி மாட்டிக்கொள்ளும் மாணவர்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios