பெண்ணுடன் குடும்பம் நடத்திவிட்டு திருமணத்துக்கு 'நோ' சொன்ன சிறப்பு எஸ்.ஐ. டிஸ்மிஸ்
பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்து குடும்பம் நடத்திவிட்டு, கைவிட்ட காவல்துறை அதிகாரி நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக வந்த புகாரின் பேரில் சென்னை பரங்கிமலையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆண்ரூஸ் கால்டுவெல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரிடம் துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இப்போது அவர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவரை டிஸ்மிஸ் செய்யும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சென்னை பரங்கிமலையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ஆண்ரூஸ் கால்டுவெல் 2021ஆம் ஆண்டு இந்த விவகாரத்தில் சிக்கினார். குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி ஒரு பெண்ணுடன் பழகி இருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆண்ரூஸ் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக உறுதி கூறி இருக்கிறார். பின்னர் ஆண்ருஸ் அந்த பெண்ணுடன் தனி வீடு எடுத்து கணவன், மனைவியாக போலவே வாழ்ந்து வந்தனர். ஆனால் திடீரென மனம் மாறிய ஆண்ரூஸ் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார் எனக் கூறப்படுகிறது.
இதனால், ஏமாற்றம் அடைந்த அந்தப் பெண், ஆண்ரூஸ் மீது கடந்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ஆண்ரூஸ் கால்டுவெல் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாது. இதையடுத்து, அவர் ஆண்ருஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கிற்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்ற ஆண்ரூஸ் முன் ஜாமீன் பெற்றுவிட்டார். இதனால் காவல்துறையினர் அவரைக் கைது செய்ய முடியவில்லை. ஆனால், பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றியதற்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி ஆண்ரூஸ் சிறப்பு எஸ்ஐ பதவியில் இருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
பின்பும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நீடித்தது. அந்த விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததால், அவருக்கு வழங்கப்பட்டிருந்த முன் ஜாமீன் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ஆண்ரூஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
“அவர்கள் நரமாமிசம் உண்பவர்கள்” பெற்றோர், உடன்பிறந்தவர்களைக் கொன்ற இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், மோட்டார் வாகனப்பிரிவு துணை ஆணையரின் பரிந்துரையின் பேரில் சென்னை பரங்கிமலையில் சிறப்பு எஸ்ஐ பணியில் இருந்து ஆண்ரூஸ் கால்டுவெல் நிரந்தரதமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.