வீட்டில நான் இருக்கும் போது வேறொரு பெண்ணுடன் உல்லாசமா இருப்பியா?கொதித்த மனைவி! கொதிக்கும் குழம்பை ஊற்றிய கணவன்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. இவரின் மனைவி பெரிய நாயகி. ஆரோக்கியசாமிக்கு அதே பகுதியில் வசித்து வரும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்ட மனைவி மீது கொதிக்கும் குழம்பை எடுத்து கணவர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. இவரின் மனைவி பெரிய நாயகி. ஆரோக்கியசாமிக்கு அதே பகுதியில் வசித்து வரும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து கணவரை கண்டித்துள்ளார். ஆனாலும், அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
இதையும் படிங்க;- சாம்பாரில் விஷம் கலந்து கொடுத்து மாமனார், மாமியார் கொலை! ஒரு வருடத்திற்கு பின் சிக்கியது எப்படி?பரபரப்பு தகவல்
இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து, பொறுமை இழந்த மனைவி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார். பின்னர், இருவரையும் சமாதனம் செய் வைத்து ஆரோக்கியசாமியை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று மீண்டும் கணவர் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கணவர் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பை எடுத்து வந்து மனைவி மீது ஊற்றியுள்ளார். வலி தாங்க முடியாமல் பெரியநாயகி அலறி துடித்துள்ளார்.
இதையும் படிங்க;- 50 வயதுடைய நபருடன் 28 வயது பெண் கள்ளக்காதல்.. இடையில் வந்த 55 வயது வைத்தி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்..!
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பெரியநாயகியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மனைவி கணவன் மீது மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக ஆரோக்கியசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.