பெரியார் சிலை அவமதிப்பு...சாட்டையை சுழற்றிய காவல்துறை...இந்து முன்னணி ஆதரவாளர்கள் 2 பேர் அதிரடி கைது !

கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Two persons have been arrested in connection with the desecration of the Periyar statue in Coimbatore

கோவை வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே தந்தை பெரியார் படிப்பகம் உள்ளது. இங்கு திராவிடர் கழகத்திற்கு சொந்தமான பெரியார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி பொடி தூவி செருப்பு மாலை அணிவித்து உள்ளனர். தொடர்ந்து  பெரியார் சிலை மீது காவி பொடி தூவியுள்ளதை கண்ட அப்பகுதி மக்கள், மற்றும் திராவிடர் கழகத் தொண்டர்கள் அப்பகுதியில் ஒன்றுகூடினர்.

Two persons have been arrested in connection with the desecration of the Periyar statue in Coimbatore

காவி சாயம்,  பூசி செருப்பு மாலை அணிவித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் . இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  அத்துடன் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

Two persons have been arrested in connection with the desecration of the Periyar statue in Coimbatore

அதேசமயம் பெரியார் சிலை தமிழகத்தில் தொடர்ந்து அவமதிக்கப்படுவதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் கோவை வெள்ளலூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் இந்து முன்னணி ஆதரவாளர் அருண் கார்த்திக், அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios