நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இருக்கும் மகாராஜபுரம் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி அஜிதா(40). கூலித்தொழிலாளியான அஜிதா அந்த பகுதிகளில் இருக்கும் வீடுகளில் வீட்டு வேலை பார்த்து வருகிறார். குரவப்புலத்தில் இருக்கும் ராமலிங்கம் என்பவரின் வீட்டில் வேலை பார்க்கும் அஜிதா அதே பகுத்தியில் இருக்கும் ஆதிமாதவன் என்பவரது வீட்டிலும்  வேலைக்கு சென்றதாக தெரிகிறது.

ராமலிங்கத்திற்கும் ஆதிமாதவனுக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஆதிமாதவன் வீட்டிற்கு வேலைக்கு செல்லக்கூடாது என ராமலிங்கம் எச்சரித்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று ராமலிங்கம் வீட்டிற்கு வழக்கம் போல அஜிதா வேலைக்கு சென்றுள்ளார். பணிகளை முடித்து விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக அந்த பகுதி வழியாக அஜிதா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோட்டமிட்டு ஆதிமாதவன் மற்றும் குமார் ஆகிய இருவர் வந்துள்ளனர்.

திடீரென அஜிதாவை வழிமறித்து தகாத வார்த்தைகளில் திட்டி அவதூறாக பேசியுள்ளனர். தொடர்ந்து இருவரும் சேர்ந்து அஜிதாவை மானபங்கம் செய்யவும் முயன்றுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த அஜிதா கூச்சல் போடவே இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். பின் அஜிதா சார்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆதிமாதவன் மற்றும் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

எவ்வளவு பெரிய நடிகரா இருந்தாலும் சரி.. சட்டத்துக்குள்ள கொண்டு வாங்க..! அன்புமணி ராமதாஸ் அதிரடி..!