Asianet News TamilAsianet News Tamil

உதவி கேட்ட குஜராத் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது

சென்ற வருடம் மதுரை வந்த குஜராத் மாணவியை விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் தள்ளியுள்ளனர்.

Two held for sexually harassing Gujarati girl in Madurai
Author
First Published Apr 12, 2023, 6:00 PM IST | Last Updated Apr 12, 2023, 6:01 PM IST

மதுரையில் கடந்த ஆண்டு குஜராத் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு இளைஞர்களை மதுரை நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

டிசம்பர் 17, 2022 அன்று மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் நடந்ததாகக் கூறப்படும் குற்றத்திற்காக சென்னையைச் சேர்ந்த எம் ஏசுஸ் ஜெயின் (22) மற்றும் அவரது நண்பர் ஆர் ஜெரோம் கதிரவன் (23) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், சி.ஏ படித்துக்கொண்டிருந்தார். டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மதுரையில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். டிசம்பர் 16 ஆம் தேதி இரவு மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவர், ஒரு அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கினார். லாட்ஜ், டிசம்பர் 17 அன்று, மாநாட்டின்போது அவர் உடல்நிலை சரியில்லாமல், பக்கத்து அறையில் தங்கியிருந்த ஜெயினிடம் தெரிவித்துள்ளார்.

உதவியாளரை ஷூ தூக்க வைத்த கள்ளக்குறிச்சி கலெக்டர்! வைரல் வீடியோவால் குவியும் கண்டனங்கள்

சென்னையிலிருந்து வந்து தங்கியிருந்த ஜெயினுடன் முன்பே அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் உடல்நிலை சரியில்லாத நிலையில் ஜெயினிடம் மருத்துவமனை செல்ல உதவி கோரியுள்ளார். அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்பி வந்த ஜெயின், பெண்ணின் அறையில் வைத்து பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டிருக்கிறார்.

அறையில் இருந்த அந்தப் பெண்ணுக்கு உணவும் மருந்தும் கொண்டுவந்த கதிரவனும் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு குஜராத் சென்ற அந்த இளம்பெண் இதுபற்றி யாரிடம் கூறாமல் இருந்திருக்கிறார். ஆனால் பிறகு அவரது அம்மாவிடம் நடந்ததைக் கூறிவிட்டார். இதனையடுத்து குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவம் மதுரையில் நடந்திருப்பதால் இந்தப் புகார் குறித்து மதுரை நகர காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திவந்த மதுரை போலீசார் செவ்வாய்க்கிழமை ஜெயின் மற்றும் கதிரவன் இருவரையும் கைது செய்தனர். இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 376வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வளர்ச்சி 5.9 சதவீதம்... இந்தியா தான் வேகமாக வளரும் நாடு: சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios