மதுபோதையில் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! வலியால் துடித்த மனைவி! ஆத்திரத்தில் கடப்பாரையால் அடித்து கணவர் கொலை!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(40). வெளிமாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஓட்டி வந்தார். இவரது மனைவி பாண்டீஸ்வரி(33). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகளும் உள்ளது.
போதையில் ஓயாமல் டார்ச்சர் செய்த கணவரை கடப்பாரையால் தாக்கி மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(40). வெளிமாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஓட்டி வந்தார். இவரது மனைவி பாண்டீஸ்வரி(33). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகளும் உள்ளது. இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் 24 மணி நேரமும் மது போதையிலேயே இருந்து வந்துள்ளார். இதனால், கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையும் படிங்க;- பிறந்த நாளில் ஐடி பெண் ஊழியர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூர கொலை.. முன்னாள் காதலன் பகீர் தகவல்.!
இந்நிலையில் கடந்த 3 நாட்களாகவே அதிக மது போதையில் இருந்த ராஜேந்திரன் மனைவியிடம் மது வாங்க பணம் கேட்டு தொந்தரவு செய்து, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை ராஜேந்திரன் தனது மனைவியை கடப்பாரை கொண்டு தாக்க முயன்ற போது தன்னை தற்காத்துக் கொள்ள மனைவி பாண்டீஸ்வரி கடப்பாரையை பிடுங்கி கணவரை தாக்கியுள்ளார்.
இதையும் படிங்க;- ஐயோ என் பொண்ண வரதட்சணை கேட்டே கொன்னுட்டாங்களே.. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுத தாய்..!
இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த பாண்டீஸ்வரி நத்தம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.