Asianet News TamilAsianet News Tamil

அதிகரிக்கும் ரவுடிகளின் அட்டகாசம்... பாத்ரூமிற்கு அழைத்துச் சென்றும் பலனில்லாததால் புதுரூட்..!

அநேக ரவுடிகளை பாத்ரூமிற்கு அழைத்துச் செல்வது குறித்தும் இந்த ஆலோசனையில் பேசப்பட்டுள்ளது. பாத்ரூமிற்கு மாற்றாக வேறு வழிவகை இருக்கிறதா என்பது குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. 

tn puducherry police discussion regarding rowdy
Author
Tamil Nadu, First Published Oct 2, 2019, 12:09 PM IST

தமிழகம், மற்றும் புதுச்சேரியில் சமீப நாட்களாக ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் குமுறி வருகின்றனர்.  அதனை உறுதிப்படுத்தும் விதமாக செய்திகளும் வெளியாகி வருகின்றன. ரவுடிகள் காவல்துறையினரைத் தாக்குவது, கத்திகளை எடுத்துக் கொண்டு வீதிகளுக்கு வந்து சண்டையிடுவது என நாளுக்கு நாள் க்ரைம் ரேட் அதிகரித்துக் கொண்டே செல்கிறது

tn puducherry police discussion regarding rowdy

இந்த சூழலை மாற்றி  அமைதியை ஏற்படுத்துவது குறித்தும்,  ரவுடிகளை ஒடுக்குவது சம்பந்தமாகவும் புதுச்சேரி,  தமிழக காவல்துறையினர் புதுச்சேரியில் ஆலோசனை நடத்தினர்.

tn puducherry police discussion regarding rowdy

அந்தக் கூட்டத்தில்  இரு மாநில ரவுடிகள், வெவ்வேறு மாநிலங்களில் பதுங்கிக்கொண்டால், அவர்களைக் கைது செய்வதுக்கு இரு மாநில காவல்துறையினரும் ஒத்துழைப்பு அளிப்பதுக்கு உறுதி அளித்துள்ளனர். மது கடத்தலில் ஈடுபடுபவர்கள் உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக, விழுப்புரம், கடலூர் மாவட்ட காவல்துறையினர், புதுச்சேரி காவல்துறையினருடன் இணைந்து 3 மாதத்துக்கு ஒருமுறை ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.tn puducherry police discussion regarding rowdy

அதேபோல் சட்டசபை இடைதேர்தல் விரைவில் நடக்க இருப்பதால் பாதுகாப்பு பணிகள், ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அநேக ரவுடிகளை பாத்ரூமிற்கு அழைத்துச் செல்வது குறித்தும் இந்த ஆலோசனையில் பேசப்பட்டுள்ளது. பாத்ரூமிற்கு மாற்றாக வேறு வழிவகை இருக்கிறதா என்பது குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios