திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கு.. அரியானாவில் முக்கிய குற்றவாளி கைது..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் மையங்களில்  காஸ் வெல்டிங் மூலம் உடைத்து  ரூ.73 லட்சம் ரூபாய் கொள்ளை நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தடையங்கள் எதுவும் சிக்கிவிடக்கூடாது என்பதால் ஏடிஎம்களை தீ வைத்து எரித்தனர். 

Tiruvannamalai ATM robbery case.. Main accused arrested in Haryana

திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அரியானாவில் முக்கிய குற்றவாளி ஹிரிப் (35) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் மையங்களில்  காஸ் வெல்டிங் மூலம் உடைத்து  ரூ.73 லட்சம் ரூபாய் கொள்ளை நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தடையங்கள் எதுவும் சிக்கிவிடக்கூடாது என்பதால் ஏடிஎம்களை தீ வைத்து எரித்தனர். இதனையடுத்து, கொள்ளை நடந்த ஏடிஎம்களை ஐஜி கண்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

இதையும் படிங்க;- கள்ளக்காதலுக்கு இடையூறு.. ஸ்கெட்ச் போட்டு கணவரை போட்டு தள்ளிய மனைவி.. வாண்டடா வந்து சிக்கி பலியான நண்பன்..!

Tiruvannamalai ATM robbery case.. Main accused arrested in Haryana

இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். நன்றாக தொழில்நுட்பம் தெரிந்த குழுவினர் அலாரத்தை துண்டித்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டிருப்பதால் பழைய குற்றவாளிகள் பட்டியலையும் ஆய்வு செய்து வந்தனர். 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில கொள்ளை கும்பல் சித்தூர் வழியாக ஆந்திர மாநிலம் சென்று கர்நாடக மாநிலத்தில் கோலார் கேஜிஎப் பகுதியில் தங்கி மறுநாள் தான் வெளிமாநிலத்ததிற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து தப்பி செல்ல உதவிய நபரை போலீசார் நேற்று இரவு கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 

இதையும் படிங்க;-  அம்மா சார் என்ன கொடைக்கானலுக்கு கூப்பிட்டு போயி ரூம்ல வச்சு இப்படி பண்ணிட்டாரு.. கதறிய மாணவி.. போக்சோவில் கைது

Tiruvannamalai ATM robbery case.. Main accused arrested in Haryana

இந்நிலையில், அரியானா மாநிலத்திற்கு சென்ற தனிப்படையினர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு நியூஜ் மாவட்டத்தில் பதுங்கி இருந்த  முக்கிய குற்றவாளி ஹிரிப் (35) என்பவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மேலும், மற்ற குற்றவாளிகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகள் விரைவில் சிக்கிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios