Asianet News TamilAsianet News Tamil

831 வழக்குகள் பதிவு... 1450 வங்கிக் கணக்குகள் முடக்கம்... கஞ்சா கடத்தலை தடுக்க அதிரடி நடவடிக்கை!!

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக இதுவரை 10 மாவட்டங்களில் 831 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு சுமார் ஆயிரத்து 450 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

thousand four fifty bank accounts frozen regarding cannabis selling case
Author
Tamilnadu, First Published Jul 26, 2022, 7:28 PM IST

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக இதுவரை 10 மாவட்டங்களில் 831 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு சுமார் ஆயிரத்து 450 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தலை தடுப்பதற்கான பல்வேறு சட்ட நடவடிக்கைகளை தமிழக காவல்துறை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் அவர்கள் வைத்திருக்கும் சொத்துக்களும் முடக்கம் செய்யப்படும் என்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்ததாக கூறி தென்மண்டல காவல்துறைக்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கி இருக்கக்கூடிய தென் மண்டல காவல்துறையின் நடவடிக்கையின் படி இதுவரை 831 வழக்குகளில் 1450 வங்கிக்கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு? வெளியான முக்கிய தகவல்!!

thousand four fifty bank accounts frozen regarding cannabis selling case

கடந்த 3 மாதங்களில் மட்டும் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 8 வழக்குகளில் நிதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அது சம்பந்தப்பட்ட நபர்களுடைய ரூ.10 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை காவல்துறை முடக்கியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் குற்ற விசாரணை முறைச்சட்டம் 1973-ன் விதிப்படி நன்னடத்தைக்கான பிணையம் பெறப்படக்கூடிய அந்த  நடவடிக்கையை தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 10 மாவட்டங்களில் குறிப்பாக கஞ்சா கடத்துவது, போதை வஸ்துகள் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 1000 நபர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடகூடாது என அந்த 1000 நபர்களிடம் முதல்கட்டமாக நன்னடத்தைக்கான பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை... கரணம் அறிந்த பெற்றோர் அதிர்ச்சி!!

thousand four fifty bank accounts frozen regarding cannabis selling case

மதுரை மாவட்டத்தில் 142 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 81 பேரும், திண்டுக்கல் மாவட்டதில் 186 பேரும், தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக 271 பேரிடம் இந்த பிணைய பத்திரமானது பெறப்பட்டுள்ளது. இந்த பிணையப்பத்திரத்தில் உள்ள குறிப்பிட்ட காலத்திற்குள் இது போன்ற குற்றச்சம்பவங்களில் அவர்கள் ஈடுபடுவார்கள் ஆனால் குற்றவாளிகள் பிணையப்பத்திர விதிமுறைகளை மீறப்பட்டதாக கருதி அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தென் மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எனவே இந்த கஞ்சா கடத்தல் முற்றிலும் தடுக்கும் நடவடிக்கையாக தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக 1000 பேரிடம் விசாரணை முடிவில் இன்னும் பலரிடம் இது போன்ற நன்னடத்தைக்கான பிணையப்பத்திரத்தை பெற உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios