Asianet News TamilAsianet News Tamil

'நீதித்துறைக்கு ஏற்பட்ட பெரிய தோல்வி'..! என்கவுண்டர் குறித்து கொதிக்கும் வழக்கறிஞர்..!

என்கவுண்டர் குறித்து கூறிய வழக்கறிஞர் அருள்மொழி, பெண் மருத்துவர் கொடூரமாக கொள்ளப்பட்டது வேதனை தருகிறது தான் என்றாலும் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தது நீதித்துறைக்கு ஏற்பட்ட தோல்வி என கூறியுள்ளார். என்கவுண்டரில் கொல்ல முடியும் என்றால் இதையே சட்டத்திற்கு உட்பட்டு 3 மாதங்களில் காவல்துறை நிகழ்த்தி காட்டியிருக்கலாம் என்றார். 

this encounter is illegal, says lawyer arulmozhi
Author
Tamil Nadu, First Published Dec 6, 2019, 10:25 AM IST

தெலுங்கானாவைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் கடந்த வாரம் பெங்களூரு-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் முற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

this encounter is illegal, says lawyer arulmozhi

இதனிடையே இன்று அதிகாலையில் பெண் மருத்துவரை கற்பழித்து கொன்ற நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். பெண் மருத்துவரை எவ்வாறு கொலை செய்தனர் என்று காவல்துறைக்கு செய்து காட்டுவதற்காக நான்கு குற்றவாளிகளையும் இன்று காலையில் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது திடீரென குற்றவாளிகள் காவல்துறையினரை தாக்கி அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் நான்கு பேரையும் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் குற்றவாளிகள் காவல்துறையினரை தாக்கவே வேறு வழியின்றி துப்பாக்கியால் அவர்களை காவலர்கள் சுட்டனர். இதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

this encounter is illegal, says lawyer arulmozhi

இந்த என்கவுண்டர் சம்பவத்தை கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு கிடைத்த நீதியாக பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இதற்கு எதிரான கருத்துகளும் தற்போது எழ தொடங்கியுள்ளது. இதுகுறித்து கூறிய வழக்கறிஞர் அருள்மொழி, பெண் மருத்துவர் கொடூரமாக கொள்ளப்பட்டது வேதனை தருகிறது தான் என்றாலும் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தது நீதித்துறைக்கு ஏற்பட்ட தோல்வி என கூறியுள்ளார். என்கவுண்டரில் கொல்ல முடியும் என்றால் இதையே சட்டத்திற்கு உட்பட்டு 3 மாதங்களில் காவல்துறை நிகழ்த்தி காட்டியிருக்கலாம் என்றார். இது போன்ற சம்பவங்கள் மக்களின் பாதுகாப்பை கேள்வி குறியாகும் என்றும் நீதி துறையின் மேல் இருக்கும் நம்பிக்கையை இழக்க வைக்கும் என்றும் கூறியுள்ளார்.

this encounter is illegal, says lawyer arulmozhi

மேலும் நான்கு பேரும் இந்த தண்டனைக்கு உரித்தானவர்கள் என்றாலும் அரசியல் சார்புடையவர்கள், வசதி படைத்தவர்கள், பதவியில் இருப்பவர்கள் வழக்கில் சம்மந்தப்பட்டு இருந்தால் இதுப்போன்ற என்கவுண்டர் நடக்குமா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios