தேனி அருகே உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவியால் தலைக்கெறிய காமத்தில் இருந்த கணவர் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் 3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உடம்பெல்லாம் கடித்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் கம்பம் அடுத்த தாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜா. இவருக்கு திருமணமாகி  2 குழந்தைகள் உள்ளது. ஆனாலும் 23 வயது பெண்ணுடன் சிங்கராஜாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அந்த பெண்ணுக்கும் கல்யாணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.  இதனால் சிங்கராஜா, தன் குடும்பத்தைவிட்டு விட்டுட்டு இந்த பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர், தனிவீடு எடுத்து வாழ்ந்து வந்தனர். 

இந்நிலையில், அந்த இளம்பெண், தன்னுடைய வீட்டிலிருந்து ரத்த காயங்களுடன் அலறி துடித்தபடியே வெளியே ஓடிவந்தார். இதனை, கண்ட அக்கம் பக்கத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக உடனே ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில்புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகின. காமவெறியில் இருந்த  சிங்கராஜா உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரத்தில் இருந்த சிங்கராஜா அந்த பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார். மேலும், வெறி தீராததால் சுவற்றில் முட்டி மோதி மண்டையில் ரத்த வழிந்தது. 

மேலும்,  3 வயது குழந்தையையும் பாலியல் ரீ தியான தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த குழந்தையின் உடம்பெல்லாம் கடித்து கடித்து காயங்களை ஏற்படுத்தினார். இதற்கு பிறகுதான் உயிரை கையில் பிடித்து கொண்டு, தாயும்-குழந்தையும் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சிங்கராஜாவை போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.