Asianet News TamilAsianet News Tamil

ஒரே நேரத்தில் 11 பெண்களுடன் குடும்பம்... சில பெண்கள் கர்ப்பம்.. போலீசையை கிறுகிறுக்க வைத்த உல்லாச மன்னன்.

நான் அவன் இல்லை சினிமா பட பாணியில் 11 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவர்களிடம் பணம் நகை மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்

The young man cheated 11 women by claiming to get married in andrapradesh
Author
Andhra Pradesh, First Published Jul 15, 2022, 9:46 PM IST

நான் அவன் இல்லை சினிமா பட பாணியில் 11 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவர்களிடம் பணம் நகை மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் மூன்று பேரை திருமணம் செய்து அடுத்தடுத்த தெருக்களில் அந்த நபர் குடியமர்த்தி அவர்களுடன் குடித்தனம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. 

பொதுவாக ஒரு சில ஆண்கள் இரண்டு திருமணங்கள் அல்லது சில நேரங்களில் 3 திருமணங்கள் வரை செய்து கொள்வது வழக்கம், ஆனால் அந்த மூன்று குடும்பத்தையும் கட்டிக்காத்து, பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்காமல் குடும்பம் நடத்துவது என்பது  அரிதிலும் அரிதானது. ஆனால் இங்கு ஒரு நபர் 11 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏராளமான பணம் நகையை சுருட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த போலீசாரே அந்நபரின் கதையைக் கேட்டு வாயடைத்துப் போய் உள்ளனர்.

The young man cheated 11 women by claiming to get married in andrapradesh

இதையும் படியுங்கள்: திருமண ஆசையில் 14 முறை கர்ப்பமான பெண்.. கருவை கலைக்க சொல்லி காதலன் டார்ச்சர்.. விரக்தியில் விபரீத முடிவு.

முழு விவரம் பின்வருமாறு:-  ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பெத்தாபுடியை  சேர்ந்தவர் அடப்பா சிவசங்கர்,  இவரது வேலையே டிப்டாப்பாக உடை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வலம் வருவதுதான், தான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என்றும், கைநிறைய லட்சம் லட்சமாக சம்பாதிப்பதாகவும்  கூறி சுற்றி வந்துள்ளார். கணவனைப் பிரிந்து இருக்கும் பெண்களை குறிவைத்து அவர்களிடம் நெருங்கிப் பழகுவது, பின்னர் அவர்களிடம் பணம் நகை போன்றவற்றை அபகரிப்பது அலைகழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் மூன்று  பெண்களுடன் திருமணம் செய்து ஹைதராபாத் கொண்டாபூரில் அடுத்தடுத்து தெருக்களில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அதில் ஏழு பெண்கள் உடன் திருமணம் நடத்தாமலேயே பழகி வந்துள்ளார், குறிப்பாக திருமணமாகி விவாகரத்து பெற்ற வசதிபடைத்த பெண்களை குறிவைத்து மேட்ரிமோனியில்  தான் சாப்ட்வேர் நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக கூறி, அந்த பெண்களுக்கு வலை விரித்து வந்துள்ளார். அவர் கூறுவதை உண்மை என நம்பிய பெண்கள் அவரை காதலித்து திருமணம் செய்து வந்துள்ளனர், பிறகு அவர்களிடமிருந்து நகை பணம் உள்ளிட்டவற்றை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகி வந்துள்ளார் சிவசங்கர்.

இதையும் படியுங்கள்: போலி சாமியார் பேச்சைக் கேட்டு ஆடு மேய்க்கும் சிறுவனை பலி கொடுத்த தம்பதி. ஆண் குழந்தைக்காக நேர்த்திக் கடன்.

இதேபோல் விதவிதமான பல பொய்களைக் கூறி 11 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். இதுவரை இவர் மீது ஆர்.சி புரம், ராய் துர்கம், சைப்ராபாத் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் பெண்கள் திருமண மோசடி புகார் கொடுத்துள்ளனர். பல பெண்களுடன் பல பெயர்களில் இவர் மோசடி செய்து ஊர் சுற்றி வந்துள்ளார், சில பெண்கள் அவரால் கர்ப்பமாகியும் உள்ளனர். ஒரே பகுதியில் ஏழுக்கும் அதிகமான பெண்களுடன் அவர் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

The young man cheated 11 women by claiming to get married in andrapradesh

பெரிய நிறுவனத்தில் வேலை செய்வதால், தாம் ஷிப்டு முறையில் தான் வரமுடியும் என அவர்களிடம் கூறி அவர்களை சமாளித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண்களிடம் கிட்டத்தட்ட 60  லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம்,  தங்கம் உள்ளிட்ட பொருட்களை அவர் அபகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் தான் ஆந்திர அமைச்சர் ஒருவரின் உறவினர் என்றும் அவர் கூறி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு எதிராக பெண்கள் புகார் கொடுத்து வருகின்றனர், சிவசங்கர் தங்களிடமிருந்து இலட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்து விட்டதாகவும், தங்களுடன் குடும்பம் நடத்தி விட்டு தலைமறைவாகி விட்டதாகவும், தற்போது அவர் தொலைபேசியை அணைத்து வைத்துவிட்டு அலைகழிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவர் மீதான புகார்களை போலீசார் தூசு தட்டி விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios