லஞ்ச ஒழிப்பு போலீஸ் என கூறி ஆய்வாளரை ஏமாற்றிய மோசடி மன்னன்..! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி எனக்கூறி மதுரையில் காவல் துறை அதிகாரிகளை ஏமாற்ற முயன்ற மோசடி நபரை போலீசார் கைது செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
போலி போலீஸ்- சமரச முயற்சி
மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் சூர்யா கலா என்பவருக்கு தொலைபேசியில் பேசிய மர்ம நபர் தன்னை லஞ்ச ஒழிப்புத்துறை அறிமுகம் செய்து கொண்டு தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அலுவலகத்திற்கு நேரில் வாருங்கள் என அதிகாரி தெரிவித்ததை தொடர்ந்து அந்த தொலைபேசி பேசிய முத்துக்கிருஷ்ணன் என்ற நபர் மதுரை உள்ள அலுவலகத்திற்கு நேரில் வந்து காவல் ஆய்வாளர் சந்தித்து பேசி இருக்கிறார், அப்போது கடந்த 2019 ஆம் ஆண்டு பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட சிலை மலைப்பட்டி கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் முத்துக்காளை என்பவர் கிரமத்தில் உள்ள மக்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது,அது தொடர்பாக விசாரணை மதுரை லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் நடைபெற்று வருவதாகவும், அவர் தன்னுடைய உறவினர் என கூறி சிபாரிசு செய்திருக்கிறார்,
மாட்டிக்கொண்ட போலி போலீஸ்
உடனடியாக இவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவல் ஆய்வாளர் சூரியகலா நீங்கள் எந்த ஆண்டு பணியில் சேர்ந்தீர்கள் தற்போது எங்கு பணியாற்றீர்கள் என கேட்க நான் 1996 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்ததாகவும், தற்போது சென்னை லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வருவதாகவும் டிஎஸ்பி பதவி உயர்வு வந்தும் அதனை ஏற்காமல் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார், இருப்பினும் இவருடைய நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவல் ஆய்வாளர் சூர்யா கலா உங்களுடைய அடையாள அட்டை காட்டும்படி தெரிவித்திருக்கிறார். அடையாள அட்டை இல்லை என கூறியதை தொடர்ந்து அவருடைய சந்தேகம் அடைந்த காவலர்கள் சுற்றி வலைத்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஏஓவுக்கு உதவ முயன்ற போலி போலீஸ்
இவர்,சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தின் தனியார் பாதுகாப்பு ஊழியராக பணியாற்றி வரும் முத்துக்கிருஷ்ணன் தன்னுடைய சகோதரிக்கு இருப்பிட சான்றிதழ் வாங்குவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள சிலை மலைப்பட்டி கிராம விஏஓ முத்துக்காளையிடம் தொலைபேசியில் பேசி தன்னை சென்னை லஞ்ச ஒழிப்புத்தகைய அதிகாரி என கூறிய அறிமுகம் செய்து கொண்டதாகவும், இதன் அடிப்படையில் முத்துக்காளைக்கு முத்து கிருஷ்ணருக்கும் நட்பு ஏற்பட்டதாகவும் இந்த நிலையில் முத்துக்காளை சிலை மலைபட்டி கிராமத்தில் மின் இணைப்பு வழங்குவதற்காக ஆவணங்கள் கையெழுத்திட்டது, தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரணை நடத்தி வரக்கூடிய நிலையில்,இந்த வழக்கை தமக்கு சுகமுகமாக முடித்துக் கொடுப்பதற்காக தான் நேரில் வந்து காவல் ஆய்வாளரிடம் பேசுவதாக முத்துகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார்,
சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்
அதனை தொடர்ந்து நேற்று காலை தேஜஸ் ரயில் மூலம் மதுரை வந்த முத்துகிருஷ்ணன் மதுரை ரயில் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் முத்துக்காளை அழைத்துக்கொண்டு மதுரை உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கண்காணிப்பு துறை அலுவலக வாசலிலே நிறுத்திவிட்டு உள்ளே சென்று பேசிய கொண்டிருக்கும்போது தான் வசமாக சிக்கிக் கொண்டது தெரியவந்தது,அதனை தொடர்ந்து மதுரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஏமாற்றம் முயன்றதன் பேரில் முத்துக்கிருஷ்ணனை கைது செய்து தல்லாகுளம் காவல்துறையில் ஒப்படைத்தனர் . அதனை தொடர்ந்து அவர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த தல்லாகுளம் காவல்துறையினர் அவரை நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்,
இதையும் படியுங்கள்