கோவையில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது காவலரை தள்ளி விட்டு தப்பி ஓடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
தப்பி ஓடிய கைதி
நடிகர் விவேக் நடித்த சிங்கம் படத்தில் கைதியை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போது கைதியின் கையில் விலங்கு மாட்டியிருக்கும் அந்த விலங்கோடு பேருந்தில் இருந்து குதித்து கைதி தப்பித்து செல்வார். அதுபோல் ஒரு சம்பவம் உண்மையில் நடைபெற்று பொதுமக்களை மிரள வைத்துள்ளது. கோவையில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது காவலரை தள்ளி விட்டு தப்பி ஓடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டாம் நிலை காவலர் காவலர் அஷ்ரப் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜீவா என்பவரை ஆர் எஸ் புரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஜீவா காவலரை தள்ளிவிட்டு ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள அம்மணி அம்மாள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தப்பிக்க முயன்றார்.

மயங்கி விழுந்த போலீஸ்
தொடர்ந்து ஜீவா தடுப்புச் சுவரை தாண்டி குதிக்கும் பொழுது தவறி விழுந்தார். இதைத்தொடர்ந்து அவரை பிடிக்க சென்ற காவலரும் அதிர்ச்சியில் திடீரென மயங்கினார்.பின்தொடர்ந்து வந்த ஆர்எஸ் புரம் போலீசார் மயங்கி விழுந்த காவலரை தண்ணீர் தெளித்து எழுப்பினர். தொடர்ந்து தப்பித்துச் சென்ற குற்றவாளி ஜீவாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.கைதி தப்பி ஓடிவிட்டால் பணியிடை நீக்கம் செய்யப்படுவிடுவோமோ என்ற அச்சத்தில் ஏற்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக போலீஸ் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
