Asianet News TamilAsianet News Tamil

தமிழக பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சிங்கப்பூர் போலீஸ்..? 3வது திருமணம் செய்ய முயற்சித்த நபர் மீது புகார்

பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை பறித்த  சிங்கப்பூர் போலீஸில் பணியாற்றுபவர் மீது தமிழக காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

A complaint has been lodged with the Tamil Nadu Police against a Singaporean police officer who cheated on a woman and married her
Author
Chennai, First Published Jun 19, 2022, 10:34 AM IST

திருமணம் செய்து மோசடி

திருமணம் ஆயிரம் காலத்து பயிர், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என கூறுவார்கள் ஆனால் தற்போது பணம்  நகைக்காக பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் நிகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏராளமான திருமண மோசடிகள்  தொடர்பான கதையை கேள்வி பட்டிருப்போம் தற்போதும் அதுபோன்ற புகார் தான் தற்போது வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது ரபீக் தற்போது சிங்கப்பூர் குடியுரிமை பெற்று அங்கு காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சாகுல் என்பவரின் சகோதரியான தஸ்லிமா பர்வீனை சிங்கப்பூரில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்போது 100 சவரன் நகை, Rolex watch மற்றும் திருமண செலவுக்காக 26,350 சிங்கப்பூர் பணத்தையும் தனது சகோதரியின் கணவரான முகமது ரபீக்கிடம் கொடுத்துள்ளார். இந்தநிலையில் திருமணமான சில நாட்களிலேயே தஸ்லிமாவை முகமது ரபீக் மற்றும் அவரது பெற்றோர் கொடுமை படுத்த தொடங்கியுள்ளனர். இருந்த போதும் அந்த பெண் தனது கணவர் வீட்டியலேயே வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சில மாதங்களிலேயே தஸ்லிமாவை வலுக்கட்டாயமாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய அவர் விவகாரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

A complaint has been lodged with the Tamil Nadu Police against a Singaporean police officer who cheated on a woman and married her

3வது திருமணத்திற்கு முயற்சித்த சிங்கப்பூர் போலீஸ்

சில நாட்களிளேயே தனது அதிகாரத்தை பயன்படுத்தி விவாகரத்தையும் பெற்றுள்ளார் முகமது ரபீக், திருமணத்தின் போது  கொடுத்த 100 சவரன் நகை உள்ளிட்ட பொருட்களை திருப்பி தராமல் முகமது ரபீக் ஏமாற்றியும் உள்ளார். இதனையடுத்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த அமீர் நிஷா என்பவரை முகமது ரபீக் இரண்டாவதாக திருமணம் செய்து அவர்களிடம் இருந்தும் 91 சவரன்  நகை மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களையும் ஏமாற்றியுள்ளார். அமீர் நிஷாவிற்கு மனநிலை பாதிப்பு என பொய்யான தகவலை பரப்பி அந்த பெண்ணையும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பியுள்ளார். இந்தநிலையில் தற்போது 3வதாக திருமணம் செய்ய திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திற்கு ரபீக் மற்றும் அவரது பெற்றோர் வந்துள்ளனர். இந்த தகவல் கிடைத்தையடுத்து  முகமது ரபீக்கால் ஏமாற்றப்பட்ட   முதல் மற்றும் இரண்டாவது திருமணம் செய்த பெண்களின் உறவினர்கள் அத்திக்கடை ஜமாத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால் முகமது ரபீக் குடும்பத்தினர் ஜமாத்தின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்தநிலையில் சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் பெண்ணின் தந்தை சம்சூதீன் உள்ளிட்ட உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் பெண்களை ஏமாற்றி நகை பணத்தை பறிக்கும் முகமது ரபீக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எங்களிடம் இருந்து திருமணத்தின் போது வாங்கிய நகை மற்றும் பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என அந்த  மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து சிங்கப்பூர் போலீஸ் முகமது ரபீக்கை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

ஹாஸ்டலில் மாணவிகளுக்கு சீண்டல்... பள்ளி முதல்வரை தட்டித் தூக்கிய போலீஸ்....!

Follow Us:
Download App:
  • android
  • ios