ஸ்ரீபெரும்புதூர் அருகே தெரசாபுரம் கிராம காலி நிலத்தில், இம்மாதம் 18ம் தேதி ராணிபேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தைச் சேர்ந்த பிரியா,(வயது 23) இறந்து கிடந்தார். 

இவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், பிரியா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார், தீவிரமாக விசாரித்து, பிரியாவின் கணவர் நவீன், அவரது கள்ளக்காதலி கல்பனா ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, ‘பிரியா, காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையைச் சேர்ந்த நவீன், 25, என்பவரை திருமணம் செய்துள்ளார். மூன்று ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். 

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துள்ளது. இதையடுத்து நவீனுக்கு, கல்பனா, 34, என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, தனியாக சென்றுள்ளார். ஆதரவின்றி வாழ்ந்த பிரியா, பெண் இடைதரகர் மூலம் விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். நவீனை, பொது இடங்களில் பார்க்கும்போதெல்லாம் அவமதிக்கவும் செய்துள்ளார். 

தவிர, கல்பனா, அவரது தம்பி காளிதாஸ் ஆகியோர், காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பது குறித்து, போலீசாருக்கு பிரியா தகவல் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கல்பனா, காளிதாஸ் கைதாகி சிறைக்கு சென்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த கல்பனா, நவீனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு, பிரியாவை காஞ்சிபுரத்திற்கு வரவழைத்தனர். மூவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின், நவீனும், கல்பனாவும் சேர்ந்து பிரியாவை அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : ஏன்டா திமுகவுக்கு ஓட்டு போட்டோம்னு மக்கள் ஃபீல் பன்றாங்க தெரியுமா ? மீண்டும் ஃபார்முக்கு வந்த கே.டி.ஆர் !