மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்தவர் காந்தா பிரசாத் நாத். இவருக்கு நீண்ட காலமாகவே திருமணம் ஆகவில்லை. 

இந்நிலையில் தினேஷ் என்பவரின் ஏற்பாட்டின்படி பூஜா என்ற பெண்ணுக்கும் காந்தா பிரசாத்க்கும் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 8 நாட்கள் ஆன நிலையில் திடீரென பூஜா தனக்கு உடம்பு சரியில்லை என கணவர் காந்தா பிரசாத்திடம் கூறி உள்ளார். இதனால் கணவர் மனைவியை தினேஷ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போது போன பூஜா போனதுதான். மறுபடியும் திரும்ப வரவில்லை. தினேஷ் வீட்டுக்கு சென்ற மனைவி என்ன ஆனார் என்று பிரசாத் பூஜாவுக்கு போன் போட்டார். 

ஆனால், போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தினேஷுக்கு அழைத்த போது அவர் நம்பரும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. அந்த நேரம் பார்த்து யதேச்சையாக பீரோவை திறந்தால், பீரோவில் இருந்த பணம், தங்க நகைகளையும் காணோம். அப்போது தான் பிரசாத் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். உடனடியாக உள்ளூர் போலீஸ் நிலையத்தில் பூஜா மீது புகார் கொடுத்தார். போலீசாரும் வழக்கு பதிவு விசாரணை நடத்தி பூஜாவை கைது செய்தனர். 

பின்னர் இது குறித்து போலீஸார் தரப்பில் பல்வேறு காரணங்களை அடுக்கினர். இதுகுறித்து பேசிய போலீசார், ‘அந்த பெண்ணின் நிஜ பெயர் சீமா கான். அவருக்கு பிரசாத்துடன் நடந்தது முதல் திருமணம் அல்ல. 15 வது திருமணம். திருமணம் செய்து கொள்வது தான் அவரது தொழில். 15 பேரை கல்யாணம் செய்து, 15 பேரிடமும் நகை, பணத்தை கொள்ளையடித்து ஓடிவந்துள்ளார் அந்த பெண். ரியா, ரெனி, சுல்லானா என்று ஒவ்வொரு கணவனிடம் ஒவ்வொரு பெயர்களுடன் நாடகமாடி உள்ளார். திருமணமாகி கணவன் அசந்த நேரம் எஸ்கேப் ஆகி வந்துவிடுவாராம். 

பிரசாத்திடம் மட்டும் தான் சரியான சந்தர்ப்பம் கிடைக்காமல் ஒரு வாரம் தங்கியிருக்க வேண்டியதாகிவிட்டது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு திருமண மோசடிக்கும் தினேஷ், இந்த பெண்ணுக்கு 30 ஆயிரம் ரூபாய் தருவாராம். மேலும் இந்த கும்பலில் 15 க்கும் மேற்பட்டவர்கள் இருப்பது தெரியவந்தது. இதில் 3 பெண்கள் உள்ப்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். 8 பேர் தலைமறைவாக உள்ளனர். திருமணம் செய்து விட்டு முதலிரவு முடிந்ததும் நகை-பணத்துடன் ஓட்டமெடுக்கும் சீமாவால் போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : Rajya Sabha Elections : 18 வருஷம் ஆச்சு.. எம்.பிக்கு கூட எனக்கு தகுதி இல்லையா ? கடுப்பான நடிகை நக்மா !

இதையும் படிங்க : கணவன் கண்முன்னே கள்ளகாதலனுடன் மனைவி உல்லாசம்.. வாழைத்தோப்பில் கொன்று புதைத்த சம்பவம் !