திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 4 வயது சிறுமியான இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். தற்போது கொரோனா பரவுதல் காரணமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் சிறுமி ரேவதி வீட்டில் இருந்தார்.

அவரின் தாய்,தந்தை இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இதனிடையே சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்று விடவே வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். சிறுமி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் சுகுமார்(70). அங்கிருக்கும் ஜெயின் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த பூசாரி சுகுமார் அவரிடம் நைசாக பேச்சுக் கொடுத்துள்ளார். சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த அவர் திடீரென பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

முதலாளியின் மனைவியை படுக்கைக்கு அழைத்த கார் டிரைவர்..! கழுத்தறுத்து கொடூரக் கொலை..!

அதுகுறித்து என்னவென்று அறியாத சிறுமி தனது தாய் வீட்டிற்கு வந்ததும் நடந்தவற்றை கூறி இருக்கிறாள். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் பூசாரி சுகுமாரை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது போக்சோவில் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.