சேலைக்கு ஆசைப்பட்டு லட்சங்களை பறிகொடுத்த டீச்சர்… என்ன நடந்தது தெரியுமா?
ஆன்லைனில் சேலை ஆர்டர் செய்த ஆசிரியர் மோசடி வலையில் சிக்கி லட்சங்களை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைனில் சேலை ஆர்டர் செய்த ஆசிரியர் மோசடி வலையில் சிக்கி லட்சங்களை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம், வெளிப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ். இவரது மனைவி செல்வி. 35 வயதான இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி அன்று செல்போனை பயன்படுத்திக் கொண்டிருக்கையில் சமூக வலைதளத்தில் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் 799 ரூபாய்க்கு சேலை என்று இருந்துள்ளது. அதை பார்த்த அவர், அதனை வாங்க முடிவு செய்து அதனை ஆர்டரும் செய்தார்.
இதையும் படிங்க: சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்..! அதிரடி நடவடிக்கை எடுத்த வருமான வரித்துறை
இதை அடுத்து அவர் ஆர்டர் செய்த சேலை கொரியர் சேவை மூலம் ஜூன் 25 ஆம் தேதி அன்று அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதனை வாங்கி ஆசையாக பிரித்து பார்க்கையில் அதில் அந்த சேலையில் கிழிசல் இருந்துள்ளது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக தான் ஆர்டர் செய்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப தருமாறு தெரிவித்துள்ளார். அதற்கு ஒரு விண்ணப்பத்தை அனுப்பிய அந்த நபர்கள் வங்கிக்கணக்குகள் தகவல்கள் மற்றும் ரகசிய எண்ணையும் கேட்டுள்ளனர். சற்றும் யோசிக்காத செல்வி, உடனடியாக அந்த நபர் கேட்ட அனைத்து தகவல்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிப்படுகொலை.. சிதறிக் கிடந்த ரத்தம்.. நெஞ்சில் அடித்து கதறிய பெற்றோர்
அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கிற்கு பணம் திரும்ப அனுப்பப்படும் என கூறி விட்டு இணைப்பை அவர்கள் துண்டித்துள்ளனர். அதன் பின்னர் தான் செல்விக்கு பேரிடி விழுந்தது. அது என்னவென்றால் அவரது இரு வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த செல்வி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் தான் தன்னை மோசடி வலையில் சிக்க வைத்தது தெரியவந்தது. இதை அடுத்து சைபர் க்ரைம் போலிஸாரை நாடிய செல்வி தன்னை ஏமாற்றியவர்கள் குறித்து புகாரளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சைபர் க்ரைம் போலிஸார் சம்பவம் தொடர்பாக மொபைல் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 700 ரூபாய் சேலைக்கு ஆசைப்பட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளது அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.