சாத்தூர் பேருந்து நிலையம் அருகே பட்ட பகலில் டாஸ்மாக் ஊழியர் படுகொலை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பேருந்து நிலையம் பின்புறம் செயல்பட்டு வரும் மதுபான கடையில் வேலை செய்து வந்தவர் காந்தி ராஜன். சம்பவத்தன்று காந்தி ராஜன் தனது நண்பருடன் கடை வாலில் நின்று பேசிக்கொண்டிருந்த நிலையில், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் காரணம் இன்றி படுகொலை செய்யப்பட்ட காந்தி ராஜன் கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொலையான காந்தி ராஜனின் மனைவிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சாரட்டு வண்டியில் சீர் வரிசைகளுடன் அழைத்து வரப்பட்ட தவளைகள்; மழை வேண்டி மக்கள் வினோத வழிபாடு
மேலும் உயிரிழந்தவரின் இரண்டு குழந்தைகளுடன் நிற்கதியாக நிற்கும் பெண்ணிற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறி பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இறந்த காந்தி ராஜனின் உறவினர்கள் மற்றும் இருக்கன்குடி ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருக்கன்குடி பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில் சாத்தூரில் வெட்டி கொலை செய்யப்பட்ட காந்திராஜனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி சாத்தூர் தாலுகா அலுவலகத்தை காந்திராஜன் உறவினர்கள் மற்றும் இருக்கன்குடி பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னையில் பிரபல கூலிப்படை தலைவன் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக்கொலை.. யார் இந்த முத்து சரவணன் தெரியுமா?
இதனைத் தொடர்ந்து சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் சாமி தலைமையில் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் காந்தி ராஜனின் மனைவி மற்றும் அம்மா இருவருக்கும் தலா 3 லட்சம் நிதி உதவி மற்றும் வீடு கட்டித்தரபடும் என்றும், அரசு வேலைக்காக பரிந்துரை செய்து தரப்படும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஊர் பொதுமக்கள் காந்தி ராஜனின் உடலை வாங்கி சென்று போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சாத்தூரில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியது.