காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மனைவி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த இளவரசி. இவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், ’எனது கணவர் கார்த்தி என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களில் அவரது போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் என்னை நடுத்தெருவில் விட்டு விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

அத்தோடு, திருப்பூரில் அவருடன் உடன் பணிபுரிந்த பெண்ணையும் காதலித்து ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து கொளத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இளவரசி குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளளார்.