பெண்கள் கல்லூரி விடுதிக்குள் பெண் வேடமிட்டு மாணவிகளை நிர்வாணமாக ரகசிய வீடியோ எடுத்த  24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெண்கள் அணியும் ஸ்கெர்ட் உடை, விக், கன்ணாடி மற்றும் ஃபேஸ் மாஸ்க் அணிந்து கொண்டு தாய்பெய் நகரத்தில் உள்ள தாம்காங் பல்கலைக் கழகத்தின் பெண்கள் ஹாஸ்டலுக்குள் அவ்வப்போது, தங்கி வந்துள்ளான். தாய்வான் நாட்டின் தலைநகரான தாய்பெய் நகரத்தில் உள்ளது தாம்காங் பல்கலைக் கழகம். இங்கு கல்லூரி மாணவிகள் தங்கி படிக்கு பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. பெண்கள் அணியும் ஸ்கெர்ட், விக், கண்ணாடி உடுத்திக் கொண்டு முகத்தில் மாஸ்க் அணிந்து அவ்வப்போது விடுதிக்குள் வந்து சென்றுள்ளார் ஒருவர். 

தன்னை சினிமா நடிகை என அறிமுகப்படுத்திக் கொண்டு கல்லூரி மாணவிகளுடன் சகஜமாக பழகி வந்துள்ளார். மாணவிகளும் அவரை தோழியாகக் கருதி குளிக்கும் இடங்கள், உடை மாற்றும் அறைகள் வரை நம்பிக்கையுடன் அனுமதித்துள்ளனர். அடிக்கடி வந்து செல்லும் அந்த தோழியின் செயல் ஒரு சில மாணவிகளுக்கு சந்தேகத்தை கிளப்பவே விடுதி நிர்வாகத்திடம் புகார் அளித்து உள்ளனர். காவல்துறைக்கு தகவல் தெரிவித்த விடுதி நிர்வாகம் அவரை பிடித்து வைத்துள்ளது. காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது பிடிபட்டவர் 24 வயதான ஆண் என்பதும் அவர் பெயர் சென் என்பதும் தெரிய வந்தது. அவர் தேசிய டிசங் ஹூவாய் பல்கலைகழகத்தில் பயின்று கொண்டே தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பயின்று வதுவதும் தெரிய வந்தது.

அடுத்து அவனை சோதனை செய்தபோது சட்டையில் பொருத்தி இருந்த ரகசிய கேமராவையும் மெமரி கார்டையும் பறிமுதல் செய்தனர். அதில் கல்லூரி மாணவிகள் பலரின் நிர்வாண புகைப்படங்களும், வீடியோவும் இருந்ததை பார்த்த மாணவிகள் பலரும் அதிர்சி அடைந்தனர்.  இதுகுறித்து கல்லூரி மாணவிகளை பாத்ரூமிலும் உடை மாற்றும் அறையிலும் ரகசியமாக பலமுறை வீடியோ எடுத்ததை சென் ஒப்புக்கொண்டார். 

இதனையடுத்து சென்னின் பெற்றோருக்கு தகவல் அளித்து அவர்களும் வரவழைக்கப்பட்டனர். தனது மகனின் செயலை அறிந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தியேலே சென்னின் செயலை கண்டு அடித்து துவைத்தனர். இதனிடையே மாணவிகளின் பெற்றோர் கல்லூரி விடுதி நிர்வாகத்தில் எப்படி வேறு ஒருவரை அனுமதிக்கலாம். தங்களது மகள்களின் எதிர்காலம் என்னவாகும். சென் அந்த வீடியோக்களை யாருக்கெல்லாம் அனுப்பி இருப்பார்? எனவே அவரை கடுமையாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.