எட்டாம் வகுப்பு மாணவி யை கர்ப்பமாக்கிய, உறவினரான ஸ்வீட் கடை மாஸ்டர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த மாணவி விமலா அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த, மாணவியின் உறவினர் இலியாஸ், 45. அங்குள்ள ஒரு ஸ்வீட் கடையில் சுவீட் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கல்யாணமாகி ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர்ல் தன் கடையில் உள்ள ஸ்வீட்டுக்களை எடுத்து வந்து, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, மாணவிக்கு கொடுத்த இலியாஸ், மாணவியை கற்பழித்துள்ளார். அதேபோல அடிக்கடி மாணவிக்கு ஸ்வீட் கொடுத்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவி வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்று, பரிசோதனை செய்ததில், மாணவி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து மாணவியிடம் விசாரித்த போது, சுவீட் மாஸ்டர் இலியாஸ் பண்ணிய லீலைகளை விலாவாரியாக சொல்லியுள்ளார் மாணவி, இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் குடியாத்தம் மகளிர் போலீசில் கொடுத்த புகாரின்படி, போக்சோ சட்டத்தில் இலியாசை நேற்று கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர்.