திடீரென தண்டவாளத்தில் படுத்த காதல் ஜோடி.. அலறிய பயணிகள்.. கண்ணிமைக்கு நேரத்தில் நடந்த பயங்கரம்.
சென்னை எழும்பூரில் உள்ள காந்தி-இர்வின் பாலம் அருகே காதலர் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். திடீரென அந்த ஜோடி பாலத்தின் கீழே உள்ள ரயில் தண்டவாளத்தில் சென்று படுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது.
ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் விரட்டியதால், அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்த காதல் ஜோடிகள் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள், காதல் ஜோடிகள் ஆணவப்படுகொலை செய்யப்படுவது, குடும்ப எதிர்ப்பு காரணமாக தற்கொலை செய்து கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் சென்னை எழும்பூர் இர்வின் பாலம் அருகே காதலர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதையும் படியுங்கள் :தஞ்சாவூர் TO தேவர் குருபூஜை.. தென் மாவட்டங்களில் சசிகலா செய்யப்போகும் தரமான சம்பவம்.. பதற்றத்தில் எடப்பாடி.
சென்னை எழும்பூரில் உள்ள காந்தி-இர்வின் பாலம் அருகே காதலர் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். திடீரென அந்த ஜோடி பாலத்தின் கீழே உள்ள ரயில் தண்டவாளத்தில் சென்று படுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது. இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கூச்சலிடவே அந்ப பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அந்த காதல் ஜோடியை தண்டவாளத்தை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு துரத்தினர். இதில் பதற்றமடைந்த அந்த ஜோடி, அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் : துரை வைகோ நியமிக்கப்பட்டது வாரிசு அரசியல் அல்ல, வரலாற்று அரசியல்.. வைகோ மீது பாசம் மாறாத நாஞ்சில் சம்பத்.
அடுத்து காந்தி இர்வின் பாலம் அருகே சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காதலர் இருவர் தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரயில்வே போலீசார் அந்த காதல் ஜோடி யார், எதற்காக அவர்கள் தற்கொலைக்கு முயன்றனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.