திருவல்லிக்கேணி லாட்ஜியில் காதலர்கள் தற்கொலையில் திடீர் திருப்பம்; ஒரேநேரத்தில் 3 பேரை டூட் விட்டதால் விபரீதம்
முன்னாள் காதலர்கள் நெருக்கமான இருந்த புகைப்படத்தை காட்டிய உல்லாசத்திற்கு அழைத்த வந்த நிலையில், புதிய காதலனுடன் சேர்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னாள் காதலர்கள் நெருக்கமான இருந்த புகைப்படத்தை காட்டிய உல்லாசத்திற்கு அழைத்த வந்த நிலையில், புதிய காதலனுடன் சேர்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவல்லிக்கேணி லாட்ஜில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் கடந்த 7ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து விடுதி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இளம் பெண்ணின் பெயர் அர்பிதா என்பதும், அவர் மூன்று நாட்களுக்கு முன்பே இறந்து விட்டதும், அதன் பின்னர் அவரது காதலன் பிரசன் ஜித் தூக்கில் தொங்கியதும் தெரியவந்தது.
மேலும் இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். இந்நிலையில்தான், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் (22) மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா (32) ஆகிய இருவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம்பெண் அர்பிதா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள ரெயின் ட்ரீ ஹோட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த கணவன் - நடுராத்திரியில் மனைவி செய்த சம்பவம்!
அப்போது அதே ஓட்டலில் வேலை பார்த்து வந்த தர்மேந்திரன் என்ற நபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது, பின்னர் அது காதலாக மாறியது. அதன்பிறகு அர்பிதா திநகரிலுள்ள ஜி.ஆர்.டி ஓட்டலில் பணிக்கு சேர்ந்தார். அப்போது அங்கு நிதீஷ் என்ற நபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அங்கு இருவரும் நெருங்கி பழகி வந்தனர். நிதிஷின் நண்பர் ராஜா அர்பிதா ஏற்கனவே தர்மேந்திரா என்பவரை காதலித்து வருவதாக அவரிடம் கூறினார்.
இதையும் படியுங்கள்: ஆன்லைனில் சயனைடு ஆர்டர் செய்து, மாமனாருக்கு மதுவில் கலந்து கொடுத்தேன்.. மருமகன் கொடுத்த வாக்குமூலம்.
இந்நிலையில் அர்பிதா ஒரே நேரத்தில் இருவருடன் பழகி வருவதை அறிந்த நிதிஷ் மற்றும் தர்மேந்தர் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் அர்பிதாவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை காண்பித்து நிதிஷ்குமார் மற்றும் தர்மேந்திரன் மற்றும் ராஜா ஆகியோர் அர்பிதாவை பாலியல் உறவுக்கு இணங்குமாறு மிரட்டி வந்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த அர்பிதா செய்வதறியாமல் திகைத்தார். இரு கட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சார்ந்த மற்றொரு காதலன் பிரசன் ஜித் என்பவரை கடந்த 3ஆம் தேதி சென்னைக்கு வரவழைத்தார். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து திருவல்லிக்கேணி லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.
பின்னர் அர்பிதா கடிதம் எழுதி வைத்து விட்டு தான் வைத்திருந்த விஷத்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டார். காதலி உறங்கிக் கொண்டிருக்கிறார் என பிரசன் ஜித் எண்ணினார், ஆனால் ஆவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது பிறகு தெரிந்தது, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த காதலன் பிரசன் ஜித் வெளியில் சென்றால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இரண்டு நாட்களாக காதலியின் பிணத்துடன் இருந்துள்ளார். அதன் பிறகு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து அவர் தூக்கில் தொங்கினார். இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தர்மேந்திராவை போலீசார் தேடி வருகின்றனர்.