காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த மால்கம் என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் தூத்துக்குடியில் நடந்து உள்ளது.
 
தூத்துக்குடியை சேர்ந்த சின்ன கண்ணுபுரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு  
தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தார் யார் ..? எதற்காக தற்கொலை செய்துகொண்டார்..? அல்லது இது தற்கொலை தானா, வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் இறந்தவர் தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டை சேர்ந்த மால்கம் என்றும், மணியாச்சி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவரது இறப்பிற்கு சரியான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. எனவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.