Asianet News TamilAsianet News Tamil

மாணவர்கள் தொடர் மரணம்...! எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் சிபிசிஐடி விசாரணை...!

மூன்று மரணங்களும் ஆரம்பத்தில் தற்கொலை என்று கருதப்பட்டாலும் பின்னர் மாணவர்களின் பெற்றோர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடரந்து காவல் நிலையத்தில்  புகார் கொடுத்து வந்தனர். அதனடிப்படையில்,  இந்த வழக்கு விசாரணையை குற்றப்புலனாய்வுத்துறைக்கு அதாவது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த ஜூலை 17 ஆம் தேதி தமிழக காவல்துறை இயக்குனர் திருபாதி உத்தரவிட்டார். 

students death cbcid police enquiry in srm uni
Author
Kattankulathur, First Published Aug 20, 2019, 1:38 PM IST

கடந்த மூன்று மாதங்களில் மூன்று மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் உயிரிழ்ந்த விவகாரம் தொடர்பாக சிபிஐடி போலீசார் எஸ்ஆர்எம் பல்கலை கழகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.students death cbcid police enquiry in srm uni

 

சர்ச்சைகளுக்கு பெயர்போன எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் தற்போது மேலும் ஒரு சர்ச்சை, இல்லை இல்லை பூதம் கிளம்பியுள்ளது என்றே சொல்லலாம். காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுபினரான தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பச்சைமுத்துவுக்கு சொந்தமான பல்கலைகழகம் இயங்கி வருகிறது, இங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது , வெளிமாநில மாணவர்களுக்கு போதை வஸ்த்துக்கள் வழங்கப்படுகிறது, போன்ற சர்ச்சைகள் அவ்வப்போது எழும்பி பின் அடங்கிவிடுவது வழக்கம், இந்நிலையில்  கடந்த மூன்று மாதங்களில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் , பல்கலை கழகத்தையே விழுங்கும் அளவிற்கு உருவெடுத்துள்ளது.students death cbcid police enquiry in srm uni

பல்கலைகழகத்தில்  விடுதியில் தங்கி பொறியியல் பயின்று வந்த திருவள்ளூர் மாவட்டத்தைச்சேர்ந்த அனுப்பிரியா (21) என்ற மாணவி கடந்த மே மாதம் 26 ஆம் தேதி விடுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார், அதற்கு மறுதினமே, ஜார்கண்ட் மாநிலத்தைச்சேர்ந்த அனித் செளத்திரி (19)  என்ற மாணவர் விடுதியின் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதனையடுத்து ஒரு மாதம் இடைவெளியில்  கடந்த ஜீலை  15 ஆம் தேதியன்று கன்னியா குமரி மாவட்டத்தைச்சேர்ந்த  தர்சன் (18) என்ற மாணவர் அதே பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த மூன்று மரணங்களும் ஆரம்பத்தில் தற்கொலை என்று கருதப்பட்டாலும் பின்னர் மாணவர்களின் பெற்றோர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடரந்து காவல் நிலையத்தில்  புகார் கொடுத்து வந்தனர்.

students death cbcid police enquiry in srm uni

அதனடிப்படையில்,  இந்த வழக்கு விசாரணையை குற்றப்புலனாய்வுத்துறைக்கு அதாவது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த ஜூலை 17 ஆம் தேதி தமிழக காவல்துறை இயக்குனர் திருபாதி உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி எஸ்.பி. மல்லிகா தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் எஸ்ஆர் பல்கலை கழகத்திற்கு நேரடியாகச்சென்று இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர். இறந்த மாணவர்களின் நண்பர்கள், மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள், காவல் துறைக்கு  தகவல் சொல்லப்பட்ட நேரம் சொன்னவர் யார்,  கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் மரணம் தொடர்பாக சக மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் விவரங்களை விவரங்களை சேகரிப்பதுடன், அங்கு இன்ச் பை இன்ச்சாக விரிவான விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விரைவில் மாணவர்களின் மரணத்தில் உள்ள உண்மை வெளியில் வரும்  என்றும் சிபிசிஐடி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios