கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இருக்கிறது ஆலன்சோலை. இந்த ஊரை சேர்ந்தவர் மெர்லின்(25). இவர் பி.எட் பட்டப்படிப்பு முடித்து இருக்கிறார். மாலை நேரங்களில் அந்த பகுதியில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வந்திருக்கிறார். 

இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெபமணி. இவரது மகன் ஜெனிஸ்(16). களியல் அருகே இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரும் மெர்லினிடம் டியூஷன் பயின்று வந்திருக்கிறார். இந்தநிலையில் நேற்று பகல் நேரத்தில் ஜெனிஸ், டியூசன் ஆசிரியையின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் வந்த மாணவன் ஜெனிசிடம் பள்ளிக்கு செல்லவில்லையா? என மெர்லின் கேட்டிருக்கிறார். அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த ஜெனிஸ் திடீரென தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மெர்லின் கூச்சல் போட்டு இருக்கிறார். அவரை தாக்கிய ஜெனிஸ், கீழே தள்ளி இருக்கிறார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மெர்லினை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருகின்றனர் அப்போது மெர்லின் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அருகே இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது மாணவர் ஜெனிஸ் தலைமறைவாக இருக்கிறார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி சிறுமியை பலவந்தமாக கற்பழித்த காமவெறி இளைஞர்..! அதிரடி தண்டனையளித்த நீதிமன்றம்..!

இந்த நிலையில் பலத்த காயமடைந்து இருக்கும் மெர்லின் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் இருக்கும் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

11 ம் வகுப்பு மாணவர், டியூசன் ஆசிரியையிடம் தவறாக நடக்க முயன்று கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: பெற்ற தாயை உலக்கையால் அடித்துக் கொடூரமாக கொன்ற மகன்..! கடன் அடைக்க பணம் தராததால் வெறிச்செயல்..!