காதலில் மண்ணைப் போட்ட கல்லூரி பேராசிரியர்.. வகுப்பறையில் நுழைந்து தூக்கிபோட்டு குத்திய மாணவன்.
மாணவியின் காதல் விவகாரத்தை அவரது பெற்றோர்களிடம் போட்டுக் கொடுத்த விவகாரத்தில் கல்லூரி பேராசிரியை மாணவன் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் காதல் விவகாரத்தை அவரது பெற்றோர்களிடம் போட்டுக் கொடுத்த விவகாரத்தில் கல்லூரி பேராசிரியை மாணவன் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். கடவுளை விட ஒரு படி குருவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நம் கலாச்சாரம், ஆனால் அந்த குருவையே மாணவர்கள் தாக்கும் சம்பவங்கள் தமிழகத்தில் பரவலாக அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் தலையிட்ட கல்லூரி பேராசிரியரை அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அடித்து உதைத்த சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படியுங்கள்: மாணவிகளின் உடல் அங்கங்களை குறிப்பிட்டு ஆபாச பேச்சு.. லேடி டீச்சர் வகுப்பறையில் செய்த அசிங்கம்.
முழு விவரம் பின்வருமாறு:- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர், இதில் அதே பகுதியை சேர்ந்த ராமர் என்ற மாணவன் 3 ஆம் ஆண்டு பிஎஸ்சி கணிதம் பயின்று வருகிறார். தனது வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியை அவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களின் காதல் விவகாரம் அக்கல்லூரியில் கணிதத் துறை தலைவர் பேராசிரியர் சிவசங்கருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அடுத்து சிவசங்கரன் அந்த மாணவர்களை கண்டித்ததுடன், அவளின் காதல் விவகாரம் குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: எனக்கு கொல்லி வைப்பனு பார்த்தேனே.. என்ன விட்டு போயிட்டியே ராசா.. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுத தாய்.!
இதனால் மாணவிக்கு அவரது வீட்டில் பிரச்சனையை ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஆத்திரமடைந்த மாணவன் சிவசங்கரன் புதன்கிழமை காலை கணிதத்துறையில் இருந்த பேராசிரியர் சிவசங்கரை துறைக்குள் நுழைந்து கடுமையாக தாக்கினார். அவருடன் அதே கல்லூரியில் படிக்கும் சுரேஷ், சிவ சுந்தர்ராமன் உள்ளிட்ட மாணவர்களும் சேர்ந்து பேராசிரியரை தாக்கினர். துறை பேராசிரியர் என்றால் எனது காதல் விவகாரத்தில் தலையிடுவியா? எங்கள் காதல் விவகாரத்தை பற்றி வீட்டிற்கு எப்படி சொல்லலாம் என கூறிக்கொண்டே ஆசிரியரை அடித்து உதைத்தனர்.
அடி தாங்க முடியாமல் ஆசிரியர் மயங்கி விழுந்தார், இதனையடுத்து அங்கிருந்த பேராசிரியர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவலறிந்த கோவில்பட்டி போலீசார் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினார். இதற்கிடையில் பேராசிரியரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் 4 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தது. இது குறித்து வேதனை தெரிவித்துள்ள பேராசிரியர் சிவசங்கரன் மாணவர்களின் காதலை கண்டித்தேன் அதற்கு கிடைத்த பரிசு அடி உதை என் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.