Asianet News TamilAsianet News Tamil

கல்லறையை தோண்டி பிணத்தை வெளியே எடுத்து வீச முயன்றதால் கதறிய மகன்!! உருக வைக்கும் சம்பவம்...

தாயின் கல்லறையை தோண்டி பிணத்தை  வெளியே எடுத்து வீச  முயன்ற தூத்துக்குடி துறைமுகத்தை எதிர்த்து, கல்லறை முன்பு தனியாக போராடிய நடத்திய தூத்துக்குடி துறைமுக தீயணைப்பு துறை அலுவலர் பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுத்துள்ளது தூத்துக்குடி துறைமுகம்.

Son protest against tuticorin harbour
Author
Tuticorin, First Published Jul 6, 2019, 3:58 PM IST

தாயின் கல்லறையை தோண்டி பிணத்தை  வெளியே எடுத்து வீச  முயன்ற தூத்துக்குடி துறைமுகத்தை எதிர்த்து, கல்லறை முன்பு தனியாக போராடிய நடத்திய தூத்துக்குடி துறைமுக தீயணைப்பு துறை அலுவலர் பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுத்துள்ளது தூத்துக்குடி துறைமுகம்.

Son protest against tuticorin harbour

தூத்துக்குடி துறைமுகத்தில் தீயணைப்புத்துறை அலுவலராக வேலைபார்க்கும் பாட்ஷா என்பவரது தாயார் ஓய்வு பெற்ற ஆசிரியர் முகமது பீபி. இவர் கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரை துறைமுக வளாகத்தில் பகுதியில் உள்ள மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Son protest against tuticorin harbour

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள நாய்கள் உடலை  தோண்ட முற்பட்டதாக  கிடைத்த தகவலின் பேரில் கல்லறையைச் சுற்றிலும் வேலி அடைத்து பாதுகாத்து உள்ளார்.  இதனை அறிந்த  துறைமுக நிர்வாகம்  வேலையை அனைத்தையும்  இயந்திரங்கள் மூலம்  அகற்றியுள்ளது. மேலும், துறைமுக நிர்வாகம் இப்பகுதியில் உடலை அடக்கம் செய்யக்கூடாது, எனவும் உடலை வெளியே எடுக்கப் போவதாகவும் தெரிவித்ததால், மனமுடைந்த அவரது மகன் பாட்ஷா அவரது உடல் புதைக்கப்பட்ட உடல் அருகே வந்து தனது சீருடையுடன் வந்து கல்லறை முன்பாக மௌனமாக உட்கார்ந்து இறந்த தனது தாயாரின் உடலை எடுத்துச் சென்று விடாமல் தடுக்கும்  விதமாக அமர்ந்திருந்தார்.

Son protest against tuticorin harbour

முஸ்லிம் மத  கோட்பாடுபடி அறுவை சிகிச்சை செய்து உடலில் காயங்கள் ஏற்படுதல் எதுவும் கூடாது என்று இருப்பதாகவும்,  அதனையும் மீறி தனது தாயாரின் இரு கண்களை தானமாக வழங்கி புரட்சி செய்தார். இதனால் இஸ்லாமிய ஜமாத் கமிட்டியை கமிட்டியை பகைத்தார். இந்நிலையில்  துறைமுக நிர்வாகம்  உடலை தோன்றப் போவதாக அறிவித்ததால் அவரது மகன் பாட்ஷா அமைதி வழிப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

Son protest against tuticorin harbour

இதனிடையே  துறைமுக நிர்வாகம் அரசியல் கட்சியினர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி  காவல்துறை மூலம் உடலை தோண்ட போவதில்லை, அதே இடத்தில் உடல் இருக்கட்டும் என  கூறியதின் பேரில் நேற்று  தனது போராட்டத்தை கைவிட்டு  பாட்ஷா வீட்டுக்குச் சென்றார்.  

இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் துறைமுக நிர்வாகம் ஒரு ஆணையை அவரது வீட்டிற்கு அனுப்பி உள்ளது. அதில்  உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப் படுவதாகவும் அவரது அடையாள அட்டை  மற்றும்  பணியில் இருப்பதற்கான அனைத்து ஆவணங்களையும் திரும்ப ஒப்படைக்க கோரியும் துறைமுக வளாகத்தில் குடியிருப்பில் உள்ள வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் எனவும்  வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது.  

Son protest against tuticorin harbour

அப்படி வெளியே எங்காவது செல்ல வேண்டுமானால் அதை துறைமுக நிர்வாகத்திடம் சொல்லி விட்டுத்தான் செல்ல வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios